பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்167


O

 

அந்த நாள் அரேபியாவில்

மூக்கு மாத்திரமே

முற்போக்காக இருந்தது !

 

O

 

சோதனை நெருப்பில்

தான் வீழும் காலை

சமுதாயம் கருகுவதாய்

சங்கடப்படுவர்

சாதாரணங்கள் -

 

O

 

நாட்டு மக்கள்

நலிகிற போது

நானே

நலில்பவர் சரித்திரர் !

 

O

 

நாயகம் அவர்கள்

இரண்டாம் வகையினர் !

 

O

 

மாவாட்டும் கல்லில்

உடன் பிறந்த உளுந்துகள்

உயிர்விடும் போது

வட்ட மேடையில்

வாட்டமாய் இருந்த

உப்புத் தொகுதி

உடன் கட்டை ஏறுவதால்