நத்தையைப் போல அண்ணலாம் முகம்மது மலைக் குகைக்குள்ளே மறைந்தே இருந்தார். தன்னை அகழ்ந்தார். அலை வேறு, கடல் வேறு ஆகாமல் ஈர விரிப்பாய் இன்றவர் ஆனார். O இரவு நின்று கொண்டே நடந்தது ... இமைப் படுதாக்கள் இறக்கப்பட்டன ! காற்றின் பற்கள் குளிரில் ஆடின ! O இதயத்தை இழந்து விட்ட பாலை வனமோ இடது பக்கமாகத் திரும்பிப் படுத்தது. O அப்போது வானம் பூமிக்கு வளைகாப்பு நடத்தியது. |