பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம் 19


மேயமுடியாமல் போயிற்று

திசைகளைக் கைத்தலத்தில்

வைத்துக் காப்பாற்றுகிறவனே !

ஒரு

தேங்காய்ச் சிதறலை

எடுப்பதா வேண்டாமா என்று

காத்திருந்தே வயதாகிப் போகிற

காகமாக மாத்திரம் என்னை

ஆக்கிவிடாதே !

உனது கூண்டு என்றால் ...

அதில் -

கிளியாகக் கிடப்பதே

எனக்குச்

சுதந்திரம் !

உனது இரவாக இருந்தால் ...

அதில் -

மின்மினியாகத் திரிவதே

எனக்கு

இலக்கியம் !

O

இறைவா !

காலைச் சொறிவதற்காகக்

கீழே குனிகிறவர்களைக் கூட

வீழ்ந்து போனவர்களின் பட்டியலில்

வீடுகட்டி அமர்த்தி விடுகிறார்