பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்35


வாய் கொண்ட மட்டும்

வாசிக்கின்றன.

O

கோடை வெப்பத்தில்

தென்னங்காய்களுக்குள்

தேரைகள் ...

இடது புறமாகத்

திரும்பிப் படுக்கின்றன !

O

அடுத்த நிமிடத்தில்

மழை வெள்ளத்தில் ...

தென்னைமரங்கள்

தங்கள்

வேர்களின் விலாசத்தை

விசாரிக்கத் தொடங்குகின்றன.

O

நாள் காட்டி ...

முதல் தேதி அன்றே

சட்டைகளை உரித்துவிட்டு

அட்டையாய் நின்றது.

O

இருந்தும் ...

தாளும், தருணமும்

தப்பாமல் கிடைத்தன.