பக்கம் எண் :

450 வலம்புரி ஜான்


குருதி குமிழியிட்டுக்கொண்டிருந்த

ஒரு முஸ்லிம் -

பதர்களைப் பதம் பார்க்க

வள்ளலிடம் வரம் கேட்டான் !

 

O

 

பகைவர் சிறைப்படின்

பரிவோடு நடக்கவேண்டும் -

பகர்ந்தார் அண்ணல்.

 

O

 

கைபர்போர்

கனைத்தது.

 

O

 

இறைவனுக்காக

வாளேந்துவோர்

வருக என்றார்.

 

O

 

அருமை மனைவி

உம்மு சல்மாவோடு

அண்ணல் புறப்பட்டார்.

‘அல்லாஹு அக்பர்’

செவிகளைச்

சிரச்சேதம் செய்தது !