பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்49


O

அரேபிய மண்ணில்

ஆங்காங்கே

வீங்கிய வயிறுகள் ...

கனவுத் துளிகளுக்கு

கர்ப்பக் கல்லறைகள் ...

பால்குடி மறக்காத

பெண்பிஞ்சுகளுக்கு

சுடலைக்காட்டில்

சுயம்வர மண்டபம் !

O

குறிபார்த்து அழிப்பதில்

அந்தநாள் அரேபியர்கள்

கொரில்லாக்களையே

கொச்சைப்படுத்தினர் !

O

வணங்கக் கொடுத்த

கைகளை வைத்து

சின்னப்பூக்களைச்

சேதப்படுத்தினர் !

முறுவல் பூக்களின்

மூச்சை நிறுத்தினர்!