பக்கம் எண் :

54 வலம்புரி ஜான்


O

நாநிலம் போற்றும்

நபிகள் பிறந்தார் !

O

மக்கா நகரம்

பர மண்டலத்தின்

பாக்தாத் ஆனது !

O

ஏதேன் தோட்டம் ...

விதைக்குள் இருந்து

விழித்துப்பார்த்தது !

O

நெபுகத் நெசாரின்

தொங்கு பூந்தோட்டம் ...

சோம்பல் முறித்தது !

O

அமுராபிச்சட்டம் ...

திருத்துங்கள் என்று

தலையைத் தாழ்த்தியது !

O

நயாகரா நீர்வீழ்ச்சி ...

புறப்பட்ட இடத்திற்குப்

போகும் வழி கேட்டது !