பக்கம் எண் :

76 வலம்புரி ஜான்


O

 

ஆடு மேய்த்தல்

அமரம் ... அமரம் ... அமரம்.

 

O

 

ஆ காத்து ஓம்பி

ஆப்பயன் அளிக்கும்

கோவலர் வாழ்க்கை ஓர்

கொடும்பாடில்லை என்றது

சிலம்பு !

 

O

 

விதை நெல்லை எரித்து

வெந்நீர் போடுவது

குற்றம் என்கிறது

சிலம்பு !

 

O

 

‘மா’வுக்குச் சொன்னது

‘மே’வுக்கும் ஆகும் !

 

O

 

நாம்

வயிற்று மைதானத்தில்

ஆடுகளைப் புதைத்து விட்டு

ஆபத்து நேரத்தில் -

பயன்படுவது ...

பிந்தி வந்த கொம்பா

முந்தி வந்த காதா என்று

வாய்க் குகைகளில்