பக்கம் எண் :

80 வலம்புரி ஜான்


தோள்களின் நடுவில்

‘முஹாரே நுபுவத்தை’

பதித்துப் பறந்தனர் !

 

O

 

அதிசயம் இதனை

பக்கத்தில் பார்த்ததால்

ஹலீமா பிள்ளைகள்

அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இல்லம் வந்ததும்

இதுவே பேச்சு ...

கணவனும் மனைவியும்

கடுகி விரைந்தனர் ...

மார்போடு அணைத்தனர் ...

அச்சத்தால் ஹலீமா

அடிவரை நடுங்கினாள் !

 

O

 

நரம்புக் கால் வாய்களில்

நகர்ந்த குருதியோ ...

சொன்னால் போகலாம்

என்றே கருதி

சுருண்டு படுத்தது !

 

O

 

அவர்களின்

மயிர்க்கால்களில் ...

துணிச்சல் -

அரைக்கம்பத்தில்

அடங்கிப் பறந்தது !