முகம்மது அருகிருக்க வேண்டும் ! O இப்படியாக இனியவர் முகம்மது இமயம் போல வளரும் நாளில் அதிசயம் ஒன்று அங்கே நடந்தது ... ஆண்டவன் கருணை அன்று நிகழ்ந்தது ... O மக்கமா நகரம் மழை இல்லாமல் ... சுக்கைப்போல் உலர்ந்து வெந்தது ! O பொக்கை வாய்க்குள்ளும் உமிழ்நீர் சுரக்க பொழுது பார்த்தது ... அப்படி வறுமை ! O அபுதாலீஃப் உள்ளத்துள்ளே ஊற்று விழித்தது ... முகம்மதுவை அவர் அழைத்துப்போனார் ... மழைக்காய் வேண்டு மகனே என்றார் ... இறைவனை வேண்டினார் முகம்மது அன்று ... |