பக்கம் எண் :

110


உண்மையை உரைத்தால் பெற்றவ ரிடத்தே

     ஒப்பிக்க முடிந்திடும் உன்றன்

நன்மையே விரும்பிச் சொல்கிறேன் அனைத்தும்

     நவின்றிடு" என்றனன், மாலிக்

"உண்மையாய் எதையும் உரைத்திட ஒப்பேன்

     உரைத்திடில் என்குலப் பெருமை

திண்ணமாய் அழியும் திரித்துப்பொய் புகலத்

     தெரிந்திலேன்!" என்றனன் இளைஞன்.

 

"தந்தையர் உண்டா, சோதரர் உண்டா

     "சாற்றுக இதையேனு!" மென்றான்.

"எந்தையும் மூத்த சோதரர் பலரும்

     இருப்பது உண்மையே, எனினும்

தந்தையைச் சேரேன் சேர்ந்திடில் மீண்டும்

     தாங்கிட நேருமித் துன்பம்!"

விந்தையாய் இளைஞன் விளம்புதல் கேட்டு

     வியந்தனர் வணிகரெல் லோரும்.

 

"இற்றைய நாளாய் எனக்கொரு குழந்தை

     இன்றியே ஏங்கினேன்; நீயோ

பெற்றவர் தம்மைச் சேர்ந்திட மறுத்தால்

     பிள்ளையாய் என்னிடம் இருப்பாய்.

சற்றும்நீ தயங்கா தென்னையே உன்றன்

     தந்தையாய் ஏற்றிடு!" என்று

மற்றவர் மலைக்க மாலிக்கு கூறி

     மகிழ்வுடன் இளைஞனை அணைத்தான்!

 

அணைத்தவன் கரங்கள் விலக்கிய இளைஞன்

     அருகினில் வரும்சிலர் நோக்கி

"எனைஇவ ரிடத்தில் விடுத்திடில் கொடுமை

     இழைத்திடு வாரென" இயம்ப