பக்கம் எண் :

149


காதல் யாத்திரை

இயல்-32

 

"தன்னுடை நாட்டின் கடமையை விடுத்துத்

      தான்வர இயன்றிடா தெனவே

மன்னவர் தைமூஸ் விரும்பிடில், பெண்ணை

      மணமுடித் தனுப்பிடில் ஏற்பேன் !"

என்பதாய் மிசுரின் அமைச்சர் அஜீஸு

      இயம்பிய யாவையும் தூதர்

சொன்னதும் தைமூஸ் சுலைகாவை அவர்க்குச்

      சுபமணம் செய்திடத் துணிந்தார் !

 

மன்னரின் அறிவிப்பு :

"அருங்குணம் படைத்த மிசுரின்நல் லமைச்சர்

      அஜீஸும் என்திருமகள் சுலைகா

இருமனம் பொருந்தி ஒருமன மடைந்து

      இல்லறம் நடத்திடத் துணிந்தார் !

திருமணம் புரிந்து சுலைகாவை அனுப்பத்

      திரண்டிடு வீர்!" எனும் செய்தி

நறுமணம் எனவே எங்கணும் பரப்ப

      நவின்றனர் மன்னர் தைமூஸே !

 

மக்களின் மகிழ்ச்சி :

எங்கிலும் சுலைகா திருமணச் செய்தி

      எட்டிடக் குடிகளெல் லோரும்

தங்களின் சொந்தத் திருமண மெனவே

      தனிப்பெரும் மகிழ்ச்சியே அடைந்து