பக்கம் எண் :

157


இருளிலே ஒளி

இயல்-34

 

கனவாகிய பசுஞ்சோலையில்

      காய்த்தகனிச் சுவையில்

மணமாகிய ஆசைப்பசி

      வளர்ந்தோங்கிய நிலையில்

பிணமாகிய சுலைகாவிடும்

      பெருமூச்சிடைத் தவழும்

கனலாகிய கொடுந்துன்பமே

      கண்டாளுயிர்த் தோழி.

 

அலைமோதிடும் நினைவாலெதும்

      அறியாமலே அமைச்சர்

மலைமோதிடும் படியே அவர்

      மனம்மோதிடும் நிலையில்

தலைமோதிட நிலையோரமே

      தனியாய் இருந்திடவே

கலைமோதிடும் கவிநெஞ்செனக்

      களைந்தாள்துயில் சுலைகா!

துடித்தேவுடன் எழுந்தாள், அருந்

      தோழியினைத் தாவிப்

பிடித்தே அரு கிழுத்தாள், ஏதும்

      பேசாமலே நெஞ்சம்

வெடித்தேவிடு மெனவேமிக

      விம்மிடவே கண்ணீர்

வடித்தாள்; மதுக் குடித்தாளென

      மயங்கித்தரை வீழ்ந்தாள்!.