பக்கம் எண் :

34


இறை வணக்கம்

 

பொன்னிலே பொருளில்            

புன்னகை புரிவோன்

விண்ணிலே மண்ணில்        

விந்தைகள் செய்வோன்     

கண்ணிலே ஒளியாய்க்       

காரிருட் களைவோன்   

தன்னிலே தானாய்த்  

தனித்தியங் கிடுவோன்   

என்னிலே உணர்வை       

எழுப்பிடும் இறையோன்

பொன்னடி தனிலே

சென்னியைக் கிடத்தி

என்னருந் தமிழில்

யூசுபு சுலைகா    

உன்னதச் சரிதையை  

உரைத்திடத் துணிந்தேன்.