[யாக்கூப் (அலைஹி) அவர்களின் முந்திய மனைவியருக்குப் பிறந்த பத்துப் புதல்வர்களில்’ஷம்ஊன்’ ‘ரூபில்’ ‘யஹுதா’ ‘லாவான்’ ‘ரூபாலூன்’ முதலியவர்கள் மூத்தவர்களாவர்.] சகோதரப் பகை இயல்-17 தந்தையர் யாக்கூப் தம்பி யூசுபுடன் தனிமையில் பேசுதல் அறிந்து வந்த ‘ஷம்ஊன்’ திரை மறைவினி லிருந்து வார்த்தைகள் அனைத்தையும் கேட்டுத் தந்திரமாகத் தந்தையைக் கவரத் தம்பி யூசுபுசொல் மாய மந்திரக் கனவைச் சோதரர்க் குரைத்து மாற்றமே தேடிட விரைந்தான்! தன்னுடைச் சோதரன்’யூபிலை’ அழைத்துச் சகலமும் விளக்கிய ‘ஷம்ஊன்’ இன்னமும் ‘யஹூதா’ ‘லாவா’ னிடத்தும் இரண்டொரு பொய்களும் கலந்து சொன்னபின் ரூபா லூனையும் அடைந்து சோதரர் அனைவரும் சேர்ந்து சின்னவன் யூசுப் செயலினைத் தடுக்கும் திட்டமே வகுத்திட முனைந்தார்! |