பக்கம் எண் :

88


மீண்டும் வந்தான்!

இயல்-22

 

ஒருமுறை தன்முகம் உற்று நோக்கிய

திருநிறை காதலன் திரும்பத் தன்னிடம்

வருவதை நம்பியே வாந்தவ ளருகினில்

திரும்பவும் தோன்றினார்; தெளிவுடன் நோக்கினாள்!

 

அன்றுபோ லின்றவர் அழகினில் மாறுதல்

ஒன்றுமே கண்டிடா துவகையே பூத்தனள்!

என்றுமே பிரிந்திடா திணைந்தவ ருடனவள்

ஒன்றியே வாழ்ந்திட உறுதியே பூண்டனள்!

 

பாய்ந்துடன் சென்றவர் பாதங்கள் பற்றியே

சாய்ந்துடல் வீழ்ந்தனள், சவமென அவரடி

ஓய்ந்தவள் கிடந்தனள்; உள்ளமே உணர்ச்சியில்

தோய்ந்தவள் துவண்டிடத் தூக்கியே நிறுத்தினார்.

 

"ஆண்டினைக் கடத்தியே அடுத்து வந்திடத்

தோன்றியதோ?" எனத் துணிந்து கேட்டபின்

"மீண்டெனைப் பிரிந்திட விரும்பி னீரெனில்

மாண்டிட விரும்புவேன் மறந்திடேல் மன்னவ!"

 

"அண்ணலே நின்முகம் அன்று கண்டபின்

உண்ணவோ உறங்கவோ உள்ளம் மறுத்தது.

திண்ணமாய்த் திரும்புவீர் என்றஎன் சிந்தையை

உண்மையாய் நம்பினேன் உறுதி காத்தனை!"

 

"பாங்கியர் நகைத்திடப் பஞ்சணை வதைத்திட

ஏங்கிய இரவுகள் எண்ணவும் கூடுமோ?

தூங்கிய போதிலும் தோன்றலே நின்முகம்

நீங்கிய தில்லையே! நெருங்குவீர்" என்றனள்.