பக்கம் எண் :

270துரை-மாலிறையன்

ஒரு பொந்தை அடைக்கத் துணியில்லை

பொந்து பலவும் அடைத்துவிடப் பொருந்து துணியைக் கிழியாக்கி
முந்தும் முயற்சி பலகொண்டு முழுதும் அடைத்து விட்டாலும்
பொந்து மற்றும் ஒன்றுக்கே பொருத்த துணிதான் இல்லாமல்
வந்தால் பார்ப்போம் எனவைத்த கண்வாங்காமல் பார்த்திருந்தார். 7

இப்பாம்பு கடித்துவிடவே பார்க்கிறது

எண்ணப் படியே அப்பாம்பும் எஞ்சி இருந்த பொந்துவழி
வண்ண மாகத் தலைநீட்ட வாடிக் கண்ட அபூபக்கர்
திண்ணம் திண்ணம் இப்பாம்பு தீய பாம்பே கடித்துவிடும்
அண்ணல் தம்மைக் காப்பதுவே அடியேன் கடமை எனஎண்ணி; 8

ஒரு பொந்தைத் தம் வலக்காலால் அடைத்தார்

துணிஇல் லாத பொந்துதனைத் தூய வலக்கால் வைத்தடைக்கப்
பணியார் பாம்பு உடன்அவர்தாம் பாதம் தன்னைக் கொத்தியதே
மணிபோல் நல்லார் முகம்மதுவின் மலர்க்கண் உறக்கம் விலக்காமல்
துணிவாய்க் காலை எடுக்காமல் தூயோர் அமைதி காத்தனரே! 9

பாம்பு தீண்டியது-முகம்மது கண் விழித்தார்

மீண்டும் மீண்டும் அப்பாம்பு மேன்மை யோரின் கால்கொத்த
நீண்ட பல்லின் நிறைநஞ்சு நெடுமெய் எங்கும் பரவியது
தூண்டல் துலங்கல் ஒன்றின்றித் தூயோர் இருக்கும் நிலையாலே
ஆண்ட வன்தன் அருந்தூதர் ஆழ்ந்த உறக்கம் கலைத்தார்கள். 10

என்ன நேர்ந்தது? என்று கேட்டார்

நீரில் லாத தாமரைபோல் நெடியோர் தலையும் துவண்டிருக்க
நேரில் எதுவோ நடந்ததென நினைத்த நபியார், “நல்லவரே!
சீரில் லாமல் இருக்கின்றீர் சிந்தை கலக்கம் கொள்கின்றேன்
ஆராலேனும் அருந்தீங்கே அடைந்தீரோநீர் சொல்” கென்றார்; 11

நடந்ததைக் கேட்ட நபியார் பேசினார்

நடந்த வற்றைத் தடந்தோளார் நயமாய் எடுத்துக் கூறியதும்
தொடர்ந்து கேட்ட அருநபியார் தொல்லை தந்த பாம்பினிடம்
“கடந்து வந்தோம் பலதொல்லை கருத்தால் தீங்கு செய்ததிலை
கிடந்த உனக்குத் தீமைதனைக் கிட்டிச் செயவும் கருதவில்லை 12