மின்னிவந்த இரண்டு பேர்களைக் கண்டனர்
மின்னலிரு பிரிவாகி இருமேனி
உருவாகி மேன்மை கொண்ட
மன்னர்களின் தோற்றம்போல் மண்மீதில்
கால்வைக்க மகிழ்ச்சி கொண்டு
கன்னலினைக் காண்பசித்த குழந்தைகள்போல்
பேரார்வம் கண்ணில் தோன்றச்
சின்னவர்கள் சூழ்ந்திருந்த செம்மலினை
முன்கண்டு சிரித்து நின்றார். 10
இவர் மானிடரோ? வானவரோ?
என்ன இது வியப்பு? என்ற சிறுவர் மற்(று)
இருவரையும் எதிரே கண்டு
மன்னவரோ? மானிடரோ? இக்காட்டில்
நமைஎல்லாம் மாய்க்க வந்த
புன்னகத்துத் தீயவரோ? விண்ணகத்துப்
பொலிவினரோ? புதுமை யாகச்
சின்னவர்நாம் சிந்தையெலாம் மயக்கமுற்றுச்
சீரழிய வந்த பேரோ?” 11
உவா மரத்தின் கீழ்க் குழந்தையைக் கொண்டு போனார்
எனக்கலங்கி அம்மருங்கும் இம்மருங்கும்
பதைபதைத்தே இரைக்க ஓடி
மனவலிமை இழந்தவராய் அச்சிறுவர்
காட்டகத்தில் மயங்கும்போது
முனம்வந்த மின்னொளியார் எதிர்பாராது
இமைப்போதில் முத்தன் னாரை
இனம்கண்டே இருகையால் கொண்டேகி
உவாமரத்தின் எழிற்கீழ் நின்றார்; 12
|