பக்கம் எண் :

412துரை-மாலிறையன்

சின்ன ஒட்டகம்தான் கடித்துக் குதறுதே

ஐயா! ஐயா! முகம்மதுவே அன்பால் எம்மைக் காத்திடுக
உய்யும் வழியே தெரியாமல் ஓடி வந்தோம் உம்மிடமே
மெய்யாய்ச் சின்ன ஒட்டகமே மிகவும் வலிமை கொண்டதுவாய்க்
கையும் காலும் யாம் பதறக் கடித்துக் குதறித் துரத்திடுதே. 6

எலி கூடி வென்று விடும்

வலியோன் அல்லா வரம் பெற்ற வள்ளால் நீரே வந்தால்தான்
புலியும் கூடப் பூனைஎனப் பொறுமை யாகி அடங்கிவிடும்
எலியும் பொருதால் வென்று விடும் எம்ஒட் டகமோ மிகப் பொறுமை
வலிஎங் கிருந்து வந்ததுவோ? வந்தோம் தப்பித் தெனச் சொன்னார்; 7

புயலையும் தென்றலாய் மாற்றுவார்

புயலைக் கூடிப் பொன்னுரையால் புதுத் தென்றலென மாற்றுமவர்
அயலோர் அஞ்சும் உரைகேட்டாங்(கு) அவ்வாறானால் உடன்வருவேன்
நயமாய்ப் பேசி அவ்விலங்கை நல்ல முறையில் செய்வன் என
இயம்பி இறைவன் துணையோடும் ஏகி விலங்கின் அயல்போனார்; 8

இதுவா துன்பம் விளைத்தது?

அயல்போய் நின்ற அகம்மதுவின் அன்பில் தோய்ந்த அவ்விலங்கு
முயலோ அணிலோ பூனைதானோ முன்வந் தமரும் நாய்ச் சேயோ?
இயல்பாய் வந்து நிற்கிறதே இவ் வொட்டகமோ வேறெதுவோ?
துயர்செய் ததுபோல் நமக்கிங்குத் தோன்ற விலையே” என எண்ணி; 9

அமைதியே உன் பண்பு - பகை ஏன் கொண்டாய்?

மணிவாய் உரையார் முகம்மதுஅன்பு மனமே பொலிய அதைநோக்கிப்
பிணிவாய்ப் பட்டா யோ விலங்கே பெருந்துன்பங்கள் விளைத்தாயாம்
அணியாய் இருந்த சோலையினை அழித்தா யாமே இது முறையோ?
பணிவாய் இருத்தல் தானேஉன் பண்பு? பகைஏன்? எனக்கேட்டார்; 10

நாற்பதாண்டாய் உழைத்து வருகிறேன்

நயநல் லுரைதான் கேட்டவுடன் நல்ல விலங்கும் எதிர் வந்து
புயல்மா முகிலே! புகழ்மதுவே! புதுமை யாகும் என்செயலே;
நயமாய் எனைவாங்கிய பேர்க்கு நாற்ப தாண்டாய் உழைக்கின்றேன்
இயல்பாய்ச் செய்யும் பணியைவிட இரண்டு மடங்கு செய்கின்றேன்; 11