புகைறா என்பவன் வழியில் எதிர்
வந்தான்
போகும் வழியில் எதிர்வந்த புகைறா எனும்பேர் அறிவாளன்
ஆகும் நன்மை தீமைஎலாம் அறிந்து சொல்லும் நெறியாளன்
ஈகை வள்ளல் முகம்மதுவின் இனிய தோற்றம் தனைக்கண்டு
பாகும் தேனும் சுவைக்கின்ற பச்சைக் குழந்தை போலானான்; 6
“இவரே நபி” எனத் தெரிந்து
கொண்டான்
கழுத்துப் பின்னோர் முத்திரையும் கால்மண் தோயா அற்புதமும்
முழுக்க ஒளியே சுடர்கின்ற முத்து மேனி நற்பொலிவும்
ஒழுக்க முற்ற உயர்இயல்பும் உடைய இவரே மறைகூறும்
விழுப்பம் மிக்க நபிஎன்றே விளங்கிக் கொண்ட
உளம்கொண்டான்; 7
அபூத்தாலிப்பு முகம்மதுவை அறிமுகம்
செய்தார்
வண்ண மயிலார் ஆமினாவும் வள்ள லாம் அப் துல்லாவும்
மண்மேல் வானத் தூதரினை மகவாய்ப் பெற்றுக் கனிந்தார்கள்
கண்ணின் மணிபோல் காத்தவரே கவின்அப் துல்லா முத்தலிப்பே
இன்னார் என்றன் இளவல் மகன்” என்றார் அபூத்தா லிப்பாங்கே. 8
சாம் நகரில் பகைவர்கள் அதிகம்
ஆயிற்றே
புகன்ற வரலா றதுகேட்ட புகைறா அந்த நல்லோர்பால்
தகுசீர் மிகுந்த சாம்நகரில் தக்கார் இனத்தைச் சேராத
பகைகொள் மனத்தார் எகுதியரும் பாவம் புரியும் இனத்தவரின்
வகைசேர் நசுறா னியர்பலரும் வாய்ப்புத் தேடி
அலைகின்றார். 9
தீயார் இவரை மாய்க்க முயல்வார்களே!
மறைகள் போற்றும் நபிபெருமான் மண்ணில் வருவார் தீநெறியின்
கறைகள் போக்கும் நல்வினைகள் கண்முன் தெரியப் புரிவார்கள்
இறைவன் ஒருவன் அவனருளால் இசுலாம் நெறியே புகல்வார்கள்
மறைவாய் நின்றோர் பலர் இவரை மாய்க்க முயற்சி
செய்வார்கள்; 10
|