பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
106

1இன

    1இனி, ‘மேல் திருவாய்மொழியில் தாம் அனுபவித்தார்; இத்திருவாய்மொழியால் பரோபதேசம் செய்கிறார்,’ என்று இயைபு கூறலும் ஒன்று. ‘ஆயின், மேல் திருவாய்மொழியில் இறைவனுடைய பரத்துவத்தை நுகர அதனால் ஒரு பெரிய திருநாள் போலே அன்றோ காலம் கழிந்தது! இவர் இப்போது நெஞ்சு ஒழிந்திருந்து பிறர்க்கு உபதேசிக்கிறபடி எங்ஙனே? தாம் அனுபவித்த பொருளை எல்லை கண்டோ, அன்றி, தாம் அப்பொருளில் 2விரக்தராகியோ?’ என்னில், தாம் நுகர்ந்த பொருளோ என்றால், 3‘தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அளவிற்கு அப்பாற்பட்ட பொருள்; 4‘கொள்ள மாளா இன்பவெள்ளம்’ அன்றே? ஆதலால், தாம் நுகர்ந்த பொருளை எல்லை கண்டு அன்று தம்முடைய காதலோ என்றால், 5‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும், 6‘மண்திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும், 7‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; ஆதலால், பொருளில் விரக்தராயும் அன்று. ஆயினும், ஒருகால் ஒரு பொருளில் காதல் பிறந்தால் அப்பொருளிலேயே வேறு காலங்களில் விரக்தி பிறக்கக் காண்கின்றோம்; அப்படியே, சில காலம் நுகரப் பின் விரக்தி பிறந்ததோ?’ என்னில், அங்ஙனமும் சொல்ல ஒண்ணாது; 8‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’ என்னும்படி, என்றும் புதியதாகவே இருக்கும். இனி, 9ஆசாரிய பதம் மேற்கொள்ளுகைக்காக அன்று; புகழ் பொருள் பூஜைகளுக்காக

 

1. மேல் பதிகத்திற்கும் இப்பதிகத்திற்கும் இரண்டு வகையில் இயைபு
  அருளிச்செய்கிறார், முதல் வகை இயைபு, மேற்கூறியது. ‘இனி’ என்று
  தொடங்கி இரண்டாம் வகை இயைபு அருளிச்செய்கிறார்.

2. விரக்தர் - ஆசையற்றவர்.

3. திருவாய்மொழி. 8. 4 : 6.

4. திருவாய்மொழி. 4. 7 : 2.

5. திருவாய்மொழி. 7. 3 : 6.

6. திருவாய்மொழி. 7. 3 : 8.

7. திருவாய்மொழி. 10. 10 : 10.

8. திருவாய்மொழி. 2. 5 : 4.

9. ‘ஏஎ பாவம் பரமே’ (2. 2 : 2.) என் கையாலே ‘ஆசாரிய பதம்
  மேற்கொள்ளுகைக்காக அன்று’ என்கிறார். ‘நீசனேன் நிறைவு ஒன்றும்
  இலேன்’ (3. 3 : 4.) என்றும், ‘கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்
  நெருப்பாகக், கொள்ளென்று தமமூடும் இவை என்ன உலகியற்கை’
  (4. 9 : 4.) என்றும், ‘பொன்னாழிக்கை என்னம்மான், நீக்கமில்லா
  அடியார்தம் அடியார் அடியார் அடியார்எங், கோக்கள்’ (8. 10 : 10.) ‘இவை
  ஆயிரத்துள் இவைபத்தும், ஓதவல்ல பிராக்கன் நம்மை ஆளுடையார்கள்
  பண்டே’ (9. 1 : 11.) என்றும் இவர் அருளிச்செய்வதனால் ‘புகழ் பொருள்
  பூஜைகளுக்காக அன்று’ என்கிறார்.