பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
124

அளவ

அளவிடக் கூடாததாக இருப்பினும், அதன் உள்ளில் மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாம்; அன்றே? அது போன்று, சம்பந்தஞானம் அடியாகக் கிட்டலாம்; சம்பந்தஞானம் இல்லாத துரும்பையன்றே கடல் கரையிலே ஏறத் தள்ளுகிறது? ‘ஆயின், சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.

(7)

19

        உள்ளம் உரைசெயல், உள்ளஇம் மூன்றையும்
        உள்ளிக் கெடுத்துஇறை, உள்ளில் ஒடுங்கே.

    பொ-ரை : மனம் வாக்குக் காயம் ஆகிய இம்மூன்றையும் ஆராய்ந்து பார்த்து, மற்றைப் பொருள்களினின்றும் மீட்டு இறைவனிடத்திலே சேர்ப்பாய்.

    வி-கு : உள்ளம்-உள்ளுவதற்குக் கருவியாக இருப்பது. வாக்கினை ‘உரை’ என்றும், உடலைச் ‘செயல்’ என்றும் அருளிச்செய்தது காரண காரிய உபசாரம். ‘ஒடுக்கு’ என்பது - ‘ஒடுங்கு’ எனத் திரிந்தது மெலித்தல் விகாரம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. ‘இறைவனுக்கு உரிய செல்வங்களுள் ஒன்றாகச்சேரின், பின்னை, தானும், தனக்கு என்னச் சில கரணங்களும் வேறாகக் காணப்படுவன இலவே? வேறாக இருப்பின் அன்றோ வணங்குதல் முடியும்?’ என்ன, அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று வணங்கும் முறையினை அருளிச்செய்கிறார்.

    உள்ளம் உரை செயல் - வெளிப்பொருள்களில் விருப்பத்தைச் செலுத்தும் மனத்தை உட்பொருளை நோக்கும்படி செய்தால், அது இறைவனை நினைத்தற்குக் காரணமாகும்; அந்நினைவு முதிர்ந்து வழிந்து, 1‘பொங்கேழ் புகழ்கள் வாயவாய்’ என்கிறபடியே, சொல்லாகப் புறப்படுகைக்குக் காரணமாகும் வாக்கு; 2‘குணங்களால் அடிமை பூண்டு இருக்கிறேன்,’ என்கிறபடியே, திருவடிகளிலே விழுந்து எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்குக் காரணமாகும் உடல். உள்ள இம்மூன்றையும் - இவைதாம் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே சேஷியான தான் இவற்றை உண்டாக்கிவைத்தான்; இவையும் வேறு சிலவும் தேடவேண்டா; இங்கே 3‘தாம் உளரே,’

 

1. திருவாய். 8. 10 : 4.
2. ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.

3. இரண்டாந்திருவந். 21.