|
வந
வந்தவாறே ‘இத்தையும்
உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன, பட்டரும் சீராமப் பிள்ளையும்
எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, ‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார்
போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று திருமந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டைக்
கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.
‘எண்பெருக்கு’ என்கிற இதனால், உயிர்களின் பன்மையினைச் சொல்லுகிறார். ‘நலத்து’ என்கிற இதனால், இவ்வுயிர்கள்தாம்
ஞானத்திற்குப் பற்றுக்கோடாகவும் இருக்கும் என்பதனைத் தெரிவிக்கிறார். ‘ஒண்பொருள்’ என்கிற
இதனால், உயிர்கள் ஞானமயமாகவும் இருக்கும் என்பதனை அருளிச்செய்கிறார். 1பிரணவத்தில்
மூன்றாம் பதமான மகாரத்தாலே, ‘ஞானத்திற்குப் பற்றுக்கோடாகவும் ஞானமயமாகவும் இருக்கும் உயிர்கள்’
என்று கூறப்பட்டிருத்தல் இங்கு அறிதல் தகும். ‘ஆயின், உயிரின் தன்மையினைத் தெரிவிப்பதற்கு
‘நலம், ஒண்மை’ என்னும் இவ்விரண்டுள் ஒன்றே அமையாதோ?’ எனின், உடலானது அறிவின்மைக்கு நிலைக்களமாய்
இருத்தலின் பிறபொருளை அறியும் ஆற்றல் இல்லாததாயும், அறிவின் மயமாக இல்லாததனால் தன்னை
அறியும் ஆற்றல் இல்லாததாயும் இருக்கும்; உயிர் அவ்வாறு அன்றி, அறிவிற்குப் பற்றுக்கோடாய்
இருத்தலின், தன்னையும் பிறபொருளையும் அறிகின்றதாயும்; அறிவின் மயமாக இருத்தலின், தன்னை
அறிகின்றதாயும் இருக்கும் என்று இரண்டனுடைய வேற்றுமையினைத் தெரிவிப்பதற்கு இரண்டு அடை மொழிகளைக்
கொடுத்து ஓதினார் என்க.
‘ஈறு இல’
என்பதனை ‘ஈறு இலவான ஒண்பொருள்’ என்றும், ‘ஈறு இலவான வண்புகழ்’ என்றும் தனித்தனியே கூட்டுக.
ஈறு இலவான ஒண்பொருளையும், ஈறு இலவான வண்புகழையும் உடையன் ஆதலே ‘நாராயணன்’ என்ற
சொற்குப் பொருளாம். ‘ஒண்பொருள் ஈறு இல வண்புகழ்’ என்பது எடுத்துக்காட்டு
1.
பிரணவம், ‘ஓம்’ என்பது. அது, அகரம் உகரம் மகரம் என மூன்று
பதமாய் இருக்கும்; அவற்றுள் மூன்றாம்
பதம், மகரம்; அது ‘மநஞாநே’
என்கிற தாதுவிலாதல், அன்றி, ‘மநஅவபோதநே’ என்கிற தாதுவிலாதல்,
ஞானம் என்ற பொருளைக் காட்டும்; அந்த ஞானத்தை இன்னஞானம் என்று
விசேடியாமையால், அது தர்ம
தர்மி ரூப ஞானங்கள் இரண்டனையும்
காட்டுவதாம். உரையில் ‘ஞானத்திற்குப் பற்றுக்கோடாக’ என்றது,
தர்மரூப
ஞானத்தை; ‘ஞானமயமாகவும்’ என்றது தர்மிரூப ஞானத்தை.
|