பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
155

    வி-கு : ‘அற உள்ளி உரைத்த பகவன்’ என்றும், ‘நின்று உணர்ந்து கட்டு அற உணக்குமின்’ என்றும் முடிக்க. ‘ஆதி அம் பகவன்’ என்ற தொடர், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு,’ என்ற திருகுறளை நினைப்பூட்டுகிறது 1‘ஆதிதானாகில் ஆதிக்கு அந்தம் உண்டாகும்; அந்தக் கோதிலான் இறைவன் என்றே கூறிடும் வேதம்,’ என்பாரும் உளராதலின், ‘அந்தமில் ஆதியம் பகவன்’ என்று அருளிச்செய்கிறார் போலும்!

    ஈடு : ஐந்தாம் பாட்டு. ‘வழிபாடு செய்மின் என்று பன்முறையுங் கூறுகின்றீர்; வழிபாடு செய்யும் வழியினை அருளிச் செய்யீர்,’ என்ன, ‘இன்று நான் உபதேசிக்க வேண்டுமோ? அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.

    பிணக்கு அற அறுவகைச் சமயமும் - வைதிக சமயத்துக்கும் ஆறு புறச்சமயங்களுக்கும் தம்மில்தாம் உண்டான பிணக்கு அறும்படியாக. நெறி உள்ளி உரைத்த-தான் சொல்லிய அனைத்தும் வேதப் பொருளாக இருக்கவும், பொருளின் உண்மைத் தன்மை தெளியப் பெறாத ஒருவன் ஆராய்ந்து சொல்லுமாறு போன்று விசாரித்து அருளிச்செய்தான்; ‘அதற்கு நினைவு என்?’ என்னில், மனத்தொடு படாமற்கூறினும் நன்மை தரத்தக்கனவாக இருப்பினும் மக்களுடைய ஹிதத்தில் உண்டான அன்பின் பெருக்காலே, சடக்கெனச் சொன்னால் ‘நிரூபியாமல் வாய் வந்தபடி சொன்னான்’ என்பர்கள் என்று ஆராய்ந்து சொன்னானாகச் சொன்னபடி. கணக்கு அறுநலத்தனன்-எல்லை இல்லாத குணத்தையுடையவன்; இனி, எல்லை இல்லாத 2வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம். ‘யார் இரக்கச் செய்தான்?’ என்னில், தன் வாத்சல்யத்தால் அருளிச்செய்தான் இத்தனையே. ‘ஆயின், வாத்சல்யத்தால் கூறிய அனைத்தும் உண்மைப் பொருள் ஆகுமோ?’ என்னில், அந்தம் இல் ஆதி-3ஆப்ததமன். எல்லார்க்கும் பிறப்பு இறப்புகளாலேயன்றோ ஞானத்திற்குக் குறைவு உண்டாவது? இவனுக்கு அவை இல்லாமையாலே கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆதலின், இவன் யாங்ஙனும் கூறினும்

 

1. சிவஞான சித்தியார், பரபக்கம்.

2. வாத்சல்யம் - தன் அடியார்கள்மாட்டுக் காண்கிற குற்றங்களைக் குணமாகக்
  கொள்ளும் தன்மை. வத்சம் - பசுவின் கன்று.

3. ஆப்ததமன் - நம்பத்தகுந்தவர்களில் உயர்ந்தவன்.