|
அ
அடுக்குத்தொடரால்,
‘அறிவு இடையிலே வந்தது; மோக்ஷ நிலையிலும் கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும் நையாயிக வைசேடியர்களை
மறுத்து, ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார். மேலும், அறியுந்தன்மை நித்தியமாகையாலே,
1‘ஞான கிரியாகர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்; அதுதான் அநித்தியம்,’ என்கிற
கிரியாவாதியையும் மறுக்கிறார். இழிந்து அகன்று உயர்ந்து-இவ்வுயிரானது அணு அளவினதாய்
இருந்தும், இறைவன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பது போன்று, ஞானத்தாலே எங்கும் நிறைந்திருக்கும்
என்கிறார். இனி, ‘எனக்குக் காலில் நோவு; எனக்குத் தலையில் நோவு,’ 2என்று
கூறும்படி இருக்கிற நிலையினைக் கூறுகிறார் எனலுமாம். உருவு இயந்த இந்நிலைமை - உருவிற்காட்டில்
வேறு பட்டிருக்கிற இந்நிலைமை. உண்டு - இந்த ஆத்துமாவினுடைய சொரூபம். இனி, 3உரு
வியந்த என்று பிரிக்கப்படும்போது, வியத்தல் - கடத்தலாய், உருவிற்காட்டில் கடந்திருக்கும்
- வேறுபட்டிருக்கும் என்னுதல். ஆக, இரண்டாலும் அறிவு இல்லாத சரீரத்தைக்காட்டிலும் வேறுபட்டிருக்கிற
ஆத்துமாவினுடைய சொரூபம் என்பது பொருளாம். உணர்ந்து உணர்ந்து உணரிலும்-அவ்வாத்துமாவின் சொரூபத்தைக்
கேவலம் கேள்வி மனனம் முதலியவைகளால் அறிந்தாலும். இனி, இதற்கு ‘ஆத்துமாவினுடைய சொரூபத்தை
யோக சாத்திரத்திற்கூறிய முறையிலே இழிந்து வருந்தி ஒருபடி
1.
‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்; அதுதான் அநித்யம்’ என்றது,
அறியுந்தன்மை என்பது,
ஞான ரூபமான கிரியைக்குக் கருத்தாவாக இருத்தல்;
கிரியைக்கு உற்பத்தி விநாசங்கள் உண்டு;
ஆகையாலே, கிரியைக்குப்
பற்றுக்கோடான அறியுந்தன்மையும் நிலை அற்றது என்றபடி. இவ்வாறு
கூறுகின்றவன்
கிரியா வாதி. ‘அறியுந்தன்மை நித்தியம்’ என்பது நம்முடைய
கொள்கை ஆகையாலே, அநித்தியம்
என்று கூறுகிற அவனை மறுக்கிறார்
என்றபடி.
2.
‘என்று கூறும்படி இருக்கிற நிலையினைக் கூறுகிறார் எனலுமாம்’ என்றது,
உயிர் அணு அளவினதாய்
இருந்து ஞானத்தால் சரீர முழுவதும்
நிறைந்திருக்கிறபடியைத் தெரிவிக்கிறார் என்பதாம். உயிர்
அவ்வாறு
நிறைந்திராவிடின், ‘கால் நோவுகிறது, தலை நோவுகிறது,’ என்று கூற
முடியாது என்றபடியாம்.
இது, ‘இழிந்து அகன்று’ என்ற தொடருக்குக்
கூறப்படும் இரண்டாவது பொருள்.
3. இங்குச் ‘சுரர் அறிவருநிலை,’ ‘அளவியன்ற’ (8, 44.) என்ற பாசுரங்களில்,
‘அறிவியந்து, அளவியன்ற’
என்ற தொடர்களுக்கு எழுதப்பட்டுள்ள
விசேடவுரையை நினைவு கூர்க.
|