பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
16

உண

உண்டாக்குவன; மற்றைக் கல்விகள் எல்லாம் தொழில்களின் சிறப்பைக் காட்டுவன’ என்றும் கூறப்பட்டு உள்ளன ஆதலின், பகவத் விஷயத்தை ஒழியக் கற்ற கல்வி எல்லாம் தொழில்களின் திறமையினைக் காட்டுவனவேயாகும்.1

   
இப்படி இருக்கிற சித்து அசித்து ஈஸ்வரர்கள் சொரூப சுபாவங்களை அறியக்கடவார் ஒருவரும் இலர்; 2இவற்றை உள்ளபடி அறிவாருள், தலைவர் ஆவர் இவ்வாழ்வார்.

    3
இவர்க்கு 4ஒப்புச் சொல்லலாவார் சம்சாரிகளிலும் இலர்; நித்தியசூரிகளிலும் இலர்; 5ஒரு சாதனத்தைச் செய்து இந்த நன்மை நமக்கு வரும் என்று இருக்க வந்தது அல்லாமையாலே தமது படியைத் தாமும் அறியார்; இவரைப் போலவே இருப்பாரைச் சம்சாரத்திற் காணாமையால்; சம்சாரிகளும் அறியார்கள்; தன் குணங்கள் புறம்பே ஒருவடிவில் இப்படிப்பலிக்கக் காணாமையாலே ஸர்வேஸ்வரனும் அறியான். சம்சாரிகளில் வேறுபட்டவர் ஆதலைப் போன்றே நித்தியசூரிகளிலும் வேறுபட்டவர். ‘ஆயின், இவ்வுலகிலே இருக்க நித்தியசூரிகளிலும் வேறுபட்டவர் என்றல் கூடுமோ?’ என்னில், பகவானுடைய அநுபவத்துக்குப் பாங்கான தேசத்திலே இருந்து அநுபவிக்கின்றவர்களைப் போல அல்லர், அவ்வநுபவத்துக்கு மேட்டு நிலமான சம்சாரத்திலே இருந்து அநுபவிக்கிறவர்கள்; ஆதலால், 6விண்ணுளாரிலும் சீரியரே’

 

1. ‘அலகுசால் கற்பின் அறிவுதூல் கல்லாது
   உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
   கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
   போஒந் துணையறிவா ரில்.’

  என்ற நாலடியார் செய்யுள் ஈண்டுக் கருதுதல் தகும்.

2. ‘இவற்றை உள்ளபடியறிவார்’ என்றது, முதலாழ்வார்கள் போன்ற
   ஞானியர்களை.

3. ‘இவர்க்கு’ என்றது, தத்துவத்திரய உண்மை ஞானத்தால் பகவானுடைய
  அநுபவ ஆனந்த சாகரத்தில் மூழ்கின இவருக்கு என்றபடி.

4. ‘என்னப்பன்தன் மாயங்களே நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார்
   நிகர் நீணிலத்தே’ (6. 4: 8); ‘சொன்மாலைகள் சொல்லுமாறு
   அமைக்கவல்லேற்கு இனி யாவர் நிகர் அகல்வானத்தே’ (4. 5: 8.) என்ற
   திருப்பாசுரங்களை ஈண்டு நினைவு கூர்க.

5. ‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ (பெரிய திருவந். 56) என்பது
   இவருடைய திருவாக்கு.

6. திருவிருத்தம் 79.