|
அ
அருள் ஆழி அம்மானை
- 1‘தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல் என் அடியார் அது செய்யார்,’ என்னும்படி
அருட் கடலானவன். இதனால், பெரிய திருவடியும் மிகை என்கிறாள், இனி அருளை இறைவனுக்கு அடைமொழியாக்காது,
ஆழிக்கு அடைமொழியாக்கி, ஆழி என்பதற்குச் சக்கரம் என்று கொண்டு, ‘அருளை நிரூபகமாகவுடைய திருவாழியைக்
கையிலேயுடையவன்’ என்று பொருள் கூறலுமாம். ‘ஆயின், ஆழி அருளை நிரூபகமாக வுடையதாய்
இருக்குமோ?’ எனின், 2‘அருளார் திருச்சக்கரம்’ என்ப ஆதலின், சர்வேஸ்வரனுக்கும்
3‘கைக்குறியாப்பை வாங்குவது இங்கேயன்றோ! சர்வேஸ்வரன்பக்கல் அருள் மறுத்தாலும்
அருள் 4கூடு கட்டி நிற்கும் இடமன்றோ இது? இப்பொருளால், ‘பெரிய திருவடி
ஒருவனுமேயோ! அங்குக் கையாளாக உள்ளார் அடைய நம் பரிகாரம் அன்றோ?’ என்று தெரிவிக்கிறாள்.
இது சொல்லியருள்-இத்தனையும்
சொல்லியருளல் வேண்டும். ‘எது?’ என்னில், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாள்’ என்கிற
வார்த்தையைச் சொல்லியருளல் வேண்டும். ஆழி வரி வண்டே-வருத்தத்தை நீக்கக் கூடியதாய் அழகியதாய்
இருக்கிற வண்டே. இனி, இதற்கு ‘வடிவு சிறுத்திருக்கவும் காமபீர்யம் பெருத்திருக்கிற வண்டே’ என்றும்,
‘சுழலப் பறக்கிற வண்டே’ என்றும் பொருள் கூறலுமாம். 5இதனால், இறைவனோடு சேர்க்கின்ற
1.
பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2.
2. திருவிருத்தம், 33.
3.
கைக்குறியாப்பை வாங்குவது-அகப்பையாலே கடன் வாங்குதல். ‘கைக்குறி,
அகப்பைக்குறி’ என்பன
உலகவழக்கு. அதாவது, ஒரு பொருளைக் கடன்
வாங்குகிறவர்கள் ‘கைக்குறியாகத் தாருங்கள்; அகப்பைக்
குறியாகத்
தாருங்கள்’ என்று சொல்லுவார்கள். குறி-அளவை ‘வறியார்க்கொன்று ஈவதே
ஈகை மற்று எல்லாம், குறியெதிர்ப்பை நீர துடைத்து’ (221) என்னுந்
திருக்குறளையும், ‘குறியெதிர்ப்பையாவது,
அளவு குறித்து வாங்கி
அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்பது’ என்னும் அதன் உரையையும் நோக்குக.
4. கூடு கட்டியிருத்தல்-தங்கியிருத்தல்.
5.
இதனால்-‘ஆழிவரிவண்டே’ என்ற இதனால், ‘வண்டே’ என்பது,
ஆசாரியனைக் குறித்தது. ‘ஆழி’ என்பது,
ஆத்தும குணத்தையும் ‘வரி’
என்பது, உருவத்தின் அழகையும் காட்டுகின்றன. இவ்வாக்கியம்
உள்ளுரைப்பொருள்.
|