|
New Page 1
கேட்க, ‘இவை உறுதிப்
பொருளை விளங்கக் கூறுகின்ற பிரபந்தங்களுள் முதன்மை பெற்ற பிரபந்தங்கள்; பகவானுடைய குணங்களை
அநுபவித்தலால் உண்டான அளவில்லாத பெருமகிழ்ச்சியானது வலியச் சொல்லுவிக்கப் பிறந்தன; பகவானுடைய
திருவருளால் உண்டான ஞானம் மூலமாகப் பிறந்தன; இதனை ஆங்கு ஆங்கு வருகின்ற 1இவருடைய
பாசுரங்களில் அமைந்துள்ள ஒலியாலும் சொல் விளக்கத்தாலும் அறியலாம்; வேதார்த்தங்களை அறிந்த
பெரியார் பலரும் அங்கீகரிக்கையாலும் சம்சாரத்தில் உத்வேகம் பிறந்தார்க்கு அறியவேண்டிய வேதார்த்தங்களை
இப்பிரபந்தங்களிலே காண்கையாலும் இவை மிகச்சிறந்த பிரமாணம் என்று அறியலாம்; எல்லாரும் சென்று
யாவரினும் மேம்பட்டவன் என்று பற்றப்படுமவனான 2திருமகள் கேள்வன் இப்பிரபந்தங்களுக்குத்
தலைவன்; சம்சாரத்தில் ருசி அற்று எம்பெருமான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்ய வேண்டும்
என்று இருக்குமவர் இவை கற்கைக்கு அதிகாரி; 3முமுக்ஷூக்களும் முத்தரும் நித்தியரும்
எம்பெருமானும் இவற்றின் சுவையை அனுபவிக்கின்றவர்கள்; பகவானுக்குச் செய்யப்படும் கைங்கரியமாகிற
நிரதிசய 4புருஷார்த்தம் இன்னபடிப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கைக்காகப் பிறந்த
பிரபந்தங்கள் இவை,’ என்று 5சிரோபாசித சத்விருத்தராய் இருந்த பெரியோர்கள்
விடை பகர்ந்து நீக்கினார்கள்.
1.
‘மயர்வு அற மதிநலம் அருளினன்’, ‘திருமாலால் அருளப்பட்ட’, ‘யானாய்த்
தன்னைத் தான் பாடி’,
‘தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்’ என்பன
முதலானவைகளால் அறிக.
2.
‘திருமாலவன் கவி’ என வருதல் காண்க.
3.
‘தொண்டர்க்கு அமுது உண்ண’ என்கையாலே முமுக்ஷூக்களும், ‘கேட்டு
ஆரார் வானவர்கள்’ என்கையாலே முத்தரும்,
‘தென்னா என்னும் என்
அம்மான் திருமாலிருஞ்சோலையானே’ என்கையாலே எம்பெருமானும்
போக்தாக்கள்
என்பது பெறுதும்.
4.
‘புருக்ஷார்த்தம் இன்னபடிப்பட்டிருக்கும்’ என்றது, ‘தனக்கேயாக எனைக்
கொள்ளும் ஈதே’ (2. 9.
4.) என்றதனை நோக்கி.
5.
சிரோபாசித சத்விருத்தர் - சத்விருத்தர்களைப் பல காலம் சேவித்த
பெரியோர்கள். சத்விருத்தர்
- ஞான ஒழுக்கச் சீலர்கள்.
|