|
தம
தமிழ் மொழியிலே
அருளிச்செய்கையாலும், எம்பெருமான் தானே பல பிறவிகள் எதிர்சூழல் புக்குத் தொடர்ந்து பற்றுவதற்கு
அடியான பாக்கியத்தை உடையவராய் எப்பொழுதும் பகவானுடைய திருவருளுக்குப் பாத்திரமானவருமாய்த்
தத்துவ ஹிதங்களில் வல்லவராய் அவற்றினுடைய உபதேசத்திலும் மூண்டவராய் விதுரர் சபரி முதலானவர்களினும்
வேறுபட்டவரான ஆழ்வார் பக்கலிலே இப்பிரபந்தங்கள் பிறக்கையாலும், இம்மொழி நடையாடுவதால்
பெரியோர்கள் மிக்குள்ள நாடுகள் எங்கும் வழங்குவனவாய் வேறு தேசங்களிலே பிறந்து சிறப்பு
வாய்ந்தவராய் உள்ள பெரியோரும் இவற்றின் வேறு ஒன்றற்கு இல்லாத சிறப்பைக் கேட்டு, ‘இவற்றைக்
கற்கைக்குத் தகுதியாக இம்மொழி நடையாடுந்தேசத்திலே பிறக்கப் பெற்றிலோமே!’ என்று இருக்கையாலும்,
இவற்றின் நன்மையினைக் கண்டு வேதார்த்த ஞானத்துக்கு அடைவு இல்லாத புறமதத்தாரும் கற்றல் இவற்றின்
சிறப்பிற்கே காரணமாதலானும், 1வேதனம் என்றும் 2உபாசனம் என்றும்
உபநிடதங்களில் சொல்லப்படுகிற பக்தியை இவற்றில் காமம் ஆகச் சொல்லுகையாலும், ஐஸ்வர்ய கைவல்யங்களைப்
பழித்தது. சிறியது நிலையற்றது முதலிய குற்றங்களாலே ஆதலானும், இவற்றில் சொல்லப்படுகின்ற எம்பெருமானுடைய
மாகாத்மியத்தாலும், எம்பெருமானை உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியலாம்படி கூறுகையாலும்,
பக்தியைத் தோற்றுவிக்கின்றவைகள் ஆதலானும், தோன்றிய பக்தியை மேன்மேலும் வளரச் செய்வன
ஆதலானும், கேட்டல் கற்றல் செய்யும் அப்போதே எல்லை அற்ற பிரீதியை உண்டாக்குகின்றவைகள்
ஆதலானும், இவற்றிற்சொல்லுகிற அர்த்தங்களுக்கு வேதங்களில் பல இடங்களையும் சான்றாகச்
சொல்லுகையாலும், உலகின் தோற்றத்திற்கு இறைவனையே காரணமாகக் கூறுவதாலும், இறைவனை அறியும்
அறிவாலேயே மோக்ஷம் உண்டாம் என்று சொல்லுகையாலும், உறுதிப்பொருள்களைக் கூறுகின்ற பிரபந்தங்களுள்
மிக்க உறுதி வாய்ந்த பிரமாணங்களாகக் கூறி, வேதநெறி நின்ற வித்தகர்கள் முன் கூறியவற்றை
மறுத்தார்கள்.
‘நன்று; பகவானுடைய
திருவருளால் அவனை அநுபவித்து நிறைவுற்றவராய் இருக்கிற இவர்க்கு எம்பெருமானைப் பிரிகையும்,
பிரிவாலே நோவுபட்டுக் கூப்பிடுகையும் வந்தவாறு யாங்ஙனம்?’
1.
வேதனம் - அறிதல்
2. உபாசனம் - வழிபாடு
|