56
56
பரிவதுஇல்
ஈசனைப் பாடி
விரிவது மேவல்
உறுவீர்!
பிரிவகை
இன்றிநன் னீர்தூய்ப்
புரிவது
வும்புகை பூவே.
பொ-ரை : துக்கம் என்பது சிறிதும் இல்லாத இறைவனை
வாயினாற்பாடி, ஆத்தும சொரூபத்தின் மலர்த்தியைப் பெறுதலில் உறுதியை உடையவர்களே, பிரிதற்கு
வகை இல்லாமல், நீங்கள் செய்ய வேண்டுவதும் நல்ல நீரைத் தூவிப் புகையைப் புகைத்துப் பூவை அவன்
திருவடிகளிலே இடுதலேயாம்.
வி-கு :
விரிவது-தொழிற்பெயர். நன்னீர் என்பதிலுள்ள
‘நல்’ என்ற அடை, வாசனைப்பொருள்கள் கலப்பு அற்ற நீர் என்பதனைக் குறிக்க வந்தது.
இப்பதிகம் முச்சீரடி
நான்காய் வருதலின், வஞ்சி விருத்தம் எனப்படும்.
ஈடு :
முதற்பாட்டு. 1‘எம்பெருமான் பரிபூர்ணன்
ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன்,’ என்கிறார்.
பரிவது இல் - துக்கம்
இல்லாத. ‘நாம் இடுகிறவை அவன் ஏற்றுக்கொள்ளுவானோ, கொள்ளானோ!’ என்று இடுகிற இவன் நெஞ்சிலே
துக்கம் உண்டாம் அன்று; அது இடப்படுகின்றவனுக்குத் துக்கமாம் ஆதலின், ‘பரிவது இல்’
என்கிறார். இனி, இதற்குப் ‘பக்ஷபாதம் இல்லாத’ என்று பொருள் கூறலுமாம்; அதாவது, ஒருவன் அதிகமான
பொருள்களைக் கொடுத்தால், அவன் பக்கல் அன்புடையனாய் இருப்பானாகில், அரிதல் அடையத்தக்கவன்
என்று அடையப்படுகின்றவனுக்குக் குற்றமாம் அன்றோ? அது இல்லை என்பார், ‘பரிவது இல்’
என்கிறார் என்றபடி. இக்குற்றங்கள் இல்லாதபடி இருக்கையாலே 2ஹேயப்பிரத்தியநீகன்
என்பதனைத்தெரிவித்தபடி. 3ஹேயம்பிரத்தியநீகதை புக்க இடத்தே உபலக்ஷணத்தால்
1.
‘ஈசனை’ என்றதனால் ‘பரிபூர்ணன்’ என்பதும், ‘புரிவதும் புகை பூவே’
என்றதனால் ‘எளிதில் ஆராதிக்கத்
தக்கவன்’ என்பதும் போதரும்.
2.
ஹேயப்பிரத்தியநீகன்-குற்றங்கட்கு எதிர்த்தட்டானவன்.
3.
குற்றங்கட்கு எதிர்த்தட்டானவன் எனின், குணங்களையுடையவன் என்பதும்
தானே போதருமாதலின், ஹேயப்பிரத்தியநீகதை
புக்க இடத்தே
உபலக்ஷணத்தால் நற்குணங்களும் புகுமன்றோ?’ என்று அருளிச் செய்கிறார்.
|