பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
290

இவ

இவ்வமிர்தத்தின் வேறுபாட்டினைக் காட்டுவார், ‘தூய அமுது’ என்கிறார். என் மாயப்பிறவி மயர்வு அறுத்தேன் - ஆச்சரியமான பிறவு காரணமாக வரும் அறிவின்மையை வாசனையோடே போக்கினேன். பிறவிக்கு ஆச்சரியமாவது, 1ஒருபடிப்பட்டு இராமை. ‘மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 2‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமேயாதலின்,’ விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச்செய்கிறார்.

(3)

70

        மயர்வுஅற என்மனத்தே மன்னினான் தன்னை
        உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை
        அயர்வுஇல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
        இசைவினை என்சொல்லி யான்விடு வேனோ?

   
பொ-ரை : அறிவின்மையானது அடியோடு நீங்க என் மனத்தின்கண் நிலைபெற்று இருக்கின்றவனை, உயர்ந்ததான ஞானம் பத்தி முதலாயவற்றையே தருகின்ற அழகிய ஒளியின் தொகுதியாய் இருப்பவனை, மறதி என்பது என்றும் இல்லாத நித்தியசூரிகளின் இருப்பு முதலானவைகட்குக் காரணனாய் முதன்மையானவனாய் இருப்பவனை, எனது இசைவே தானாக இருக்கிறவனை என்ன காரணத்தைச் சொல்லி யான் விட்டு விலகுவேன்?

    வி-கு : உயர்வினை - வினைத்தொகை. ஒரு சொல்லாகக் கோடலுமாம். ஒகாரம் - அசைநிலை.

    ஈடு : நான்காம் பாட்டு. 3‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று அடியிலே நீர் விரும்பியவாறே இறைவன் திருவருள் செய்ய, ‘மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்’ என்று பிறவி அற்ற தன்மையினை நீரே கூறினீரே! இனி, இறைவனை விட்டுப் பிடித்தல் பொருத்தம் உடைத்து அன்றோ?’ என்ன, ‘நான் என்ன காரணத்தால் விடுவேன்?’ என்கிறார்.

    மயர்வு அற - அறிவின்மையானது வாசனையோடே போக என் மனத்தே மன்னினான்தன்னை - இன்னமும் மயர்வு குடி கொள்ள

 

1. ‘ஒருபடிப்பட்டிராமை’ என்றது தேவர் முதலிய பற்பல சரீரங்களை மாறி
  மாறியடையும் தன்மையை.

2. திருவிருத்தம், 1.

3. ‘என் சொல்லி யான் விடுவேன்?’ என்றதனை நோக்கி அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.