பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
296

உபக

உபகாரம். என்னுள் இரான் எனில் - இப்படி அடியாரை ஏற்றுக் கொண்டு அவர்கள் பேற்றுக்குத் தான் தொழில்செய்யுமவன் என்னுள் இரான் எனில், ‘எனில்’ என்கையாலே, விடுதற்குக்காரணம் இல்லை என்றபடி. பின்னையான் ஒட்டுவேனோ - ‘எவ்வகையிலும் இரேன்’ என்னுமாகில், பின்னை, நான் அவன் போக்கை இசைவேனோ? ‘நன்று; இறைவன் தனக்குத்தானே உரியவன் ஆதலின், போகானோ?’ எனின், 1‘என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரிதபாரதந்திரியத்துக்கும் ஏதேனும் 2கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப்போமோ?’ என்பதாம். இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். தொங்குகை-திரிதல்.

(6)

73

        யான்ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
        தான்ஒட்டி வந்துஎன் தனி நெஞ்சை வஞ்சித்து
        ஊன்ஒட்டி நின்றுஎன் உயிரிற் கலந்துஇயல்
        வான்ஒட்டு மோஇனி என்னை நெகிழ்க்கவே?


    பொ-ரை :
‘யான் உடன்பட்டு, இறைவனை என் மனத்தில் இருக்கச் செய்வேன் என்று செய்தேன் அல்லேன் அவ்வாறு இருக்க, தானே சூளுறவு செய்து வந்து எனது ஒப்பற்ற மனத்தையும் தனது குணங்களாலும் செயல்களாலும் வசீகரித்து, பின் என் சரீரத்தில் பொருந்தி நின்று, நான் விலக்காது இருந்தமையைப் பார்த்த அளவில் என் உயிரிலே கலந்து இருத்தலையுடையவன் ஆனான்; அவ்விறைவன் இப்பொழுது நான் விலகிப்போவேன் என்றால் உடன்படுவானோ?’

    வி-கு : ‘வந்து வஞ்சித்து நின்று கலந்து இயல்வான்,’ என முடிக்க. இயல்வான் - பெயர். ‘நெகிழ்க்க ஒட்டுமோ’ எனக் கூட்டுக.

    ஈடு : ஏழாம் பாட்டு. 3‘முக்குணத்தின் வசப்பட்டவராய்ப் போந்தீர்; ஒரு சமயத்தில் ‘அவனை விடேன்’, என்கிறீர்; உம்முடைய

 

1. ‘நான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டு இருத்தலைப் போன்று, இறைவன்
  அடியார்கட்குக் கட்டுபட்டவன் ஆதலின், அடியவனாகிய என்னுடைய
  அனுமதி இன்றி என்னை நீங்கான்,’ என்றபடி.

2. கண்ணழிவு-குறைவு.

3. ‘ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே’ என்ற பதங்களை நோக்கி வினா
  விடையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.