பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
298

74

74

        என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சம்
        தன்னை அகல்விக்கத் தானுங்கில் லான்இனிப்
        பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை
        முன்னை அமரர் முழுமுத லானே.


    பொ-ரை :
என்னைப் பிரித்தாலும் என்னுடைய குற்றம் அற்ற மனத்தினைப் பிரிப்பதற்குத் தானும் ஆற்றலுடையவன் அல்லன்; ‘என்னை?’ எனின், நப்பின்னைப் பிராட்டியாருடைய நீண்ட மூங்கில் போன்ற தோள்களை மகிழ்கின்ற பெருமை பொருந்திய முதன்மை பெற்ற - நித்தியசூரிகளுடைய எல்லாச் செயல்களுக்கும் காரணமாய் இருக்கின்ற - இறைவன் ஆதலால் என்க.

    வி-கு : ‘நெகிழ்க்கிலும்’ என்ற உம்மை, இன்மை குறித்து நின்றது. ‘கில்’ என்பது முதனிலை. கிற்றல் - ஆற்றல் கொள்ளுதல். ‘கிற்பன் கில்லேன்’
(3. 2 : 6.) என்பர் மேலும். மகிழ்பீடு - வினைத்தொகை. ‘பீடுடை முதலான’
எனக் கூட்டுக.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘நான் விடேன், அவன் விடான்’ என்பன போன்று கூறுதல் எற்றிற்கு? இனி, அவன் தான் ‘பிரிப்பன்’ என்னிலும் அவனுடைய நற்குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.

    என்னை நெகிழ்க்கிலும் - மயர்வு அற மதிநலம் அருளப்பெற்ற என்னை அகற்றல் அரிது. இவ்வரிய செயலைச் செய்யினும். என்னுடை நல்நெஞ்சம்தன்னை அகல்விக்க-2‘நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி’ என்றும், 3‘தொழுது எழு என் மனனே’ என்றும் சொல்லலாம்படி அவன் பக்கலிலே உட்புகுந்த நெஞ்சந்தன்னை அகல்விக்க. தானும் கில்லான் சர்வ சக்தி என்னா, எல்லாம் செய்யப்போமோ? ஏன்? செய்து போந்திலனோ பல்நெடுங்காலம்?’ என்ன, இனி-அவனும் இனி மேல் உள்ள காலம் மாட்டான். ‘இனி’ என்கிற ‘உரப்பு எதனைப் பற்ற?’ என்னில், அதற்குக் காரணம் அருளிச்செய்கிறார் மேல்: பின்னை நெடும்பணைத்தோள் மகிழ் பீடுடை முதலான்-நப்பின்னைப் பிராட்டியுடைய நெடிதாய்ச் சுற்றுடைத்தாய்ப்

 

1. ‘என்னுடை நல் நெஞ்சந்தன்னை அகல்விக்கத் தானுங்கில்லான்,’ என்றதனை
  நோக்கி, அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. பெரிய திருவந். 1.

3. திருவாய். 1. 1 : 1.

4. உரப்பு - உறுதி.