பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
304

அருளிச்செய்தார்; மூன்றாம் பாட்டில், ‘இவ்விரண்டு கோடியிலும் நீவிர் யாவிர்?’ என்ன, ‘உன்னை அனுபவியாநிற்க விரோதி கழிந்தவன் நான்,’ என்றார்; நான்காம் பாட்டில், ‘என்னை இவ்வளவாகப் புகுர நிறுத்தினவனை என்ன காரணத்தால் விடுவேன்?’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ, நான் அவனை விடுவேன்?’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘அவன் தான் விடிலோ?’ என்ன, ‘அவன் போக்கை இசையேன்,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘நீர்தாம் விடிலோ?’ என்ன, ‘அவன் என்னைப்போக ஒட்டான்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘இந்நாள் வரை போக விட்டிலனோ?’ என்ன, ‘நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை இனி அவனாலும் விடப்போகாது, என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இவ்வார்த்தைகள்தாம் எற்றிற்கு? ஒரு நீராகக் கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது,’ என்றார்; பத்தாம் பாட்டில். ‘அவனுடைய நற்குணங்களை எல்லாக்காலத்தும் அனுபவித்து வருத்தமுடையேன் அல்லேன்,’ என்றார்; முடிவில், இத்திருவாய்மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        ‘பிறவியற்று நீள்விசும்பில் பேரின்பம் உய்க்கும்
        திறம் அளிக்கும் சீலத் திருமால் - அறஇனியன்
        பற்றுமவர்க்கு,’ என்று பகர்மாறன் பாதமே
        உற்றதுணை என்றுஉளமே! ஓடு.

(7)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.