பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
356

இன

இனிச் செய்ய முடியாதது உண்டோ? இனி என்ன குறைவினம் - 1‘உன்னைப் பெற்றால் என் செய்யோம்?’ என்று சாத்தியாமிசம் உண்டாகச் சொன்ன இடம் தப்பச் சொன்னோம்; உன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் காரியம் செய்வானாக இருந்தால் சாத்தியாமிசந்தான் உண்டோ? அதாவது, அவன் உபாயம் நித்தியமாய் ஒருவருடைய விருப்பத்தை எதிர் பாராததாய் இருக்குமாயின், நாம் செய்யக்கூடிய காரியந்தான் யாது?’ என்றபடியாம்.

    ‘அங்ஙனம் ஆயின், நான் செய்ய வேண்டுவது யாது?’ என்ன, ‘செய்ய வேண்டுவது உண்டு,’ என்கிறார்; தான் அவனைக் கிட்டும் போது, 2‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு; நீ அப்பொழுது அவனை விடாதேகொள்’ என்கிறார்; மைந்தனை - நித்திய யௌவன சுபாவனை. 3கெடுவாய், இவ்விஷயத்தைச் சிலரால் விடப்போமோ? மலராள் மணவாளனை - பெரிய பிராட்டியார் 4‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தையன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்? துஞ்சும் போதும்-தாழ்ந்தவன் என்று அகலும் போதும். ‘துஞ்சுதல்’ என்பது, பிரிதல் என்னும் பொருளைக் காட்டுமோ?’ எனின். பிரிதல் என்பது இறத்தலுக்குப் பரியாயம்; ஆதலின், காட்டும் என்க. 5‘உம்மைப் பிரிந்தாலே ஒரு முகூர்த்தகாலமும் பிழைத்திரேன்’, என்ற இளைய பெருமாளைப் போன்றவர் அன்றோ இவரும்? விடாது தொடர் கண்டாய் - நீ அவனை விடாதே தொடரப் பார். ஆக, இவ்வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தையன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்? ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ என்கிறார் என்பதாம்.

(4)

 

1. ‘உன்னைப் பெற்றால் என்செய்யோம்?’ என்றது, உபாசகர் கூற்று. ‘இனி
  என்ன குறைவினம்?’ என்றது, பிரபந்நர் கூற்று. ‘அடியேன் நான் முயற்சியின்றி
  நின்னருளே பார்த்திருப்பன் நீசனேனே’ என்கிறபடியே, பிரபந்நர் செய்ய
  வேண்டுவது இல்லையன்றே? ‘வாழும் சோம்பர்’ என்பர்
  கொண்டாடிப்பொடிகளும். சாத்தியாமிசம் - செய்யக் கூடிய காரியம்.

2. ‘வளவேழுலகு’ என்றது, ‘வளவேழுலகு’ என்ற திருப்பதிகத்தில்
  அருளிச்செய்த தன்மையை.

3. ‘கெடுவாய்’ என்றது, வார்த்தைப்பாடு.

4. திருவாய்மொழி, 6, 10 : 10.

5. ஸ்ரீ ராமா. அயோத். 31 : 5.