| 
மற
 
மற்று ஓர் நோயும் 
சார்கொடான் - 1நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் 
கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம்பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற்கொள்ளச் 
செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக்கொடான். 
 
    நெஞ்சமே சொன்னேன் 
- 2‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது 
என்று போலேகாணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு 3‘இந்தக் கீதையின் பொருள் 
தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார். ‘ஏன்? முதல் 
முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் 
கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், 
பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று 
4‘பதண் பதண்’ என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், 
உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, 
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணிவண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந்நேர் 
நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் 
சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று. 
1. 
‘நிஷத்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல்’ முதலிய வாக்கியங்களால் 
  ‘ஓர் நோயும்’ என்றதனை விவரிக்கிறார். 
 
2. ‘நெஞ்சமே, சொன்னேன்’ என்பதற்கு மூன்றுவகையில் கருத்து 
  அருளிச்செய்கிறார். இம்மூவகைக் 
கருத்தையும் முறையே காண்க. 
  ‘சார்கொடான்’ என்னுதலே போதியதாக இருக்க, மேல் ‘சொன்னேன்’ 
  என்று அருளிச்செய்வதனால் இங்ஙனம் கருத்துக்கொள்ளவேண்டும் என்க. 
 
3. 
ஸ்ரீ கீதை, 18 : 67. 
 
4. 
‘பதண் பதண்’ என்பன, பரிதபிக்கையைக் காட்டுவனவாம்; ‘பதறினேன், 
  பதறினேன்’ என்றபடி. 
 
5. 
இது, வியாச பகவான் கூற்று. ‘வேத சாஸ்திரங்களைக் காட்டிலும் மேலான 
  சாஸ்திரங்கள் இல்லை; அது 
போன்று, கேசவனைக் காட்டிலும் உயர்ந்த 
  தெய்வம் பிறிது இல்லை; இது சத்தியம், மீண்டும் சத்தியம், 
மீண்டும் சத்தியம்’ 
  என்பது அந்தச் சுலோகத்தின் பொருள். 
 |