பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
62

ணத

ணத்தைப் பற்ற ‘யவன்’ என்கிறார். 1இதனால், குணங்களை வேண்டாத இறைவனுடைய பிரசித்தியைச் சொல்லுகிறார் என்றாதல், குணங்களோடு கூடி இருக்கின்ற இறைவனுடைய வேறுபாட்டினைச் சொல்லுகின்றார் என்றாதல் கொள்க. அவன் - இதற்கு அப்பால் ஓர் உபகாரத்தைச் சொல்ல நினைந்து கீழ் நின்ற நிலையை அமைத்து மேலே 2தோள்படி கொள்ளுகிறார். ‘அவ்வுதவி தான் யாது?’ என்னில், மயர்வு அற - ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை 3வாசனையோடே போகும்படியாக. ஞாநாநுதயமாவது, தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல். அந்யதா ஞானமாவது பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல். விபரீத ஞானமாவது, தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் 4கேவலனுடைய ஞானம், தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் இறைவன் தான் இவர்க்கு அறிவு இன்மையை வாசனையோடே போக்கினபடி. மதி நலம் - ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று 5கூறுவாரும் உளர். இனி, நலம் மதி என முன்பின்னாகக் கூட்டி ‘நலமான மதி’ என்று பொருள் கொண்டு, ‘முளைக்கும்போதே வயிரம் பற்றி முளைக்கும் 6பொருள்களைப்போலே

 

1. இதனால் - ‘யவன்’ என்கிற இதனால். ‘குணங்களை வேண்டாத
  இறைவனுடைய பிரசித்தியைச் சொல்லுகிறார்’ என்பதற்கு இயைய, ‘யவன்
  உயர்வற வுயர்நல முடையவன்’ என ‘யவன்’ என்னும் சொல்லை முன்னே
  கூட்டிப் பொருள் கொள்க. இரண்டாவது பொருளுக்குச் சொற்களை
  உள்ளவாறே கொள்க.

2. தோள்படி கொள்ளுதலாவது, அரசன் யானைமீது வீற்றிருத்தற்கு
  ஏதுங்காலத்துச் சாமந்தர் தோள்களைப் படியாகக் கொள்ளுதல்.

3. முன்பு செய்து போந்தவற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான சம்ஸ்காரம்
  ‘வாசனை’ எனப்படும்.

4. கேவலன் ஆவான், கைவல்ய நிஷ்டன். கைவல்யமாவது, ஆத்துமானுபவம்.
  ஒரு பெண்ணானவள் பதியோடு சேர்ந்து பதியினுடைய குணம் உருவம்
  செல்வம் முதலியவற்றை அனுபவிப்பதை விட்டுத் தான் தனியே
  இருந்துகொண்டு, தன் அழகினைத் தான் அனுபவிப்பது போன்று, விரசைக்கு
  அக்கரையில் பரமபதத்துக்கு வெளியில் ஒரு மூலையில் இருக்கும்
  கைவல்யலோகத்தில் தன்னைத்தானே அனுபவிப்பது.

5. ‘கூறுவாருமுளர்’ என்றது, இராமாநுசருக்கு முன்னர் இருந்த பெரியார்களை.

6. பொருள்கள் - கருங்காலி மரம் முதலியவை.