பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
96

New Page 1

    பொ-ரை : இறைவன் உளன் என்றால் உள்ளவன் ஆவான்; அப்பொழுது உருவத்தோடு இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய தூல சரீரமாகும். இறைவன் இலன் என்றாலும் உள்ளவனே யாவான்; அப்பொழுது உருவம் இல்லாதனவாய் இருக்கும் இப்பொருள்கள் எல்லாம் அவனுடைய சூட்சும சரீரமாகும். ஆதலால், உளன் என்றும் இலன் என்றும் கூறப்படும் இவற்றைக்குணமாகவுடைமையின், உருவமும் அருவமும் ஆன தூல சூக்குமப் பொருள்களையுடையவனாய் எங்கும் ஒழிவு இல்லாதவனாகிப் பரந்து இருகின்றவனே ஆவான் என்பதாம்.

    வி-கு :
ஒழிவிலன் என்பது முற்றெச்சம். ‘ஒழிவிலன், பரந்து உளன்,’ என முடிக்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. சர்வ சூந்யவாதியை மறுக்கிறார் ‘மறுக்கின்ற முறைதான் என்?’ என்னில், 1ஸ்ரீ பாஷ்யத்திலே சூனிய வாதியை மறுத்த முறையிலே மறுக்கிறார். ‘ஆயின், காலத்தால் முற்பட்ட இவ்வாழ்வார்தாம் அடியாக இராமாநுசர் அவனை மறுக்கலாம்; இவர்தாம் அவனைமறுப்பதற்கு அடி என்?’ என்னில், அதுவும் இவ்வாழ்வார் பக்கலிலே உண்டு. ‘எங்ஙனம்?’ என்னில், 2புறம்பே சிலர் பிரமன் முதலிய தேவர்களை இறையவர் என நினைந்து, அதற்குத் தக, பிரமாணங்கள் சிலவற்றையும் நியமித்துக்கொண்டு வந்து தோற்ற, தாம் அங்கீகரித்தவனே எல்லாரினும் மேம்பட்டவன் என்றும், உலகம் அவனுக்குச் சரீரமாக இருப்பதனால் அடிமை என்றும், தாம் சொல்லுவனவற்றிற்குப் பிரமாணம் வேதம் என்றும், தம்முடைய மதத்தை உபந்யசித்து நின்றார் இதுகாறும். 3இவை இத்தனையும் இல்லை என்னும்போது பூர்வபட்சமாக இவற்றை உடன்பட்டு எடுத்துக்கூறி அன்றோ இல்லை என்று தள்ளுதல் வேண்டும்? ‘ஆயின், இவற்றை உடன்பட்டு எடுத்துக் கூறி அவனால் இல்லை

 

1. பிரம சூத்திரம் இரண்டாவது அத்தியாயம் இரண்டாவது பாதத்தில்,
  ‘சர்வதாநுப பத்தேஸ்ச’ என்ற சூத்திரத்தின் உரையை நோக்குக.

2. ‘புறம்பே சிலர்’ என்று தொடங்கும் வாக்கியம், ‘அதுவும் இவ்வாழ்வார்
  பக்கலிலே உண்டு’ என்பதனை விளக்க எழுந்தது.

3. ‘இவை இத்தனையும்’ என்பது முதல் ‘சர்வசூந்யவாதம் சித்தியாது’ என்றது
  முடிய ஆழ்வார் திருவுள்ளத்தில் எழும் விசாரம்.