பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 2

நான்காந்திருவாய்மொழி - பா. 9

111

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘இவள் ‘பட்டன’ என்கைக்கு என்பட்டாள்?’ என்ன, ‘படுவன எல்லாம் பட்டாள்; இனி, என் படல் வேண்டும்?’ என்கிறாள்.

    பட்டபோது எழுபோது அறியாள் - 2உதித்ததும் மறைந்ததும் அறிகின்றிலள். ‘இவள் அறிவதும் ஏதேனும் உண்டோ?’ என்னில், விரை மட்டு அலர் தண் துழாய் என்னும் -‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று, திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும். ஆக, 3‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே, நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று 4அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான ‘சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள். அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரவாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம் 5இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் ‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று. ஆக, 6‘அடைந்தவர் பகைவர்

_____________________________________________________________

1. ‘இனி, என்படல் வேண்டும்?’ என்றது, ‘இதற்கு முன்பு அனுபவியாததாய், இனிமேல்
  அனுபவிக்க வேண்டியதாயுள்ள துக்கம் உளதோ?’ என்றபடி.

2. ‘பட்ட போது’ என்றது, ‘முத்துப்பட்டது’ என்னுமாறு போன்று, ‘உதித்த போது’ என்றபடி.
  ‘எழுபோது’ என்றது, ‘எழுகளம்’ என்னுமாறு போன்று, ‘சூரியன் மறைந்தபோது’ என்றபடி.
  எழுகளம் - முடிகிற யுத்த பூமி’ என்பர் அரும்பதவுரைகாரர். படுதல் - உண்டாதல்
  என்னும் பொருட்டு; ‘இலமென் கிளவிக்குப் படுவரு காலை’, ‘இலம்பாடு ஒற்கம்
  ஆயிரண்டும் வறுமை’ என்ற சூத்திரங்களில் நச்சினார்க்கினியரும் ‘படுதல் - உண்டாதல்’
  என்று உரைத்தார்.

  ‘பட்டபோது எழுபோது அறியாள்’ என்ற இவ்விடத்து,
  ‘காலையும் பகலும் கையறு மாலையும்
  ஊர்துஞ்சி யாமமும் விடியலும் என்றிப்
  பொழுதுஇடை தெரியிற் பொய்யே காமம்’

  என்ற குறுந்தொகைச் செய்யுளை ஒப்பு நோக்கலாகும்.    

3. ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய, பேருந்தார்களுமே பிதற்ற’
  என்பது திருவாய்மொழி, 6. 7 : 2.

4. அலப்ய லாபம் - கிடையாத பொருள் கிடைத்தல்.

5. இப்போது - தாய் தன் வார்த்தையாகச் சொல்லுகிற போது.

6. ‘சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்!’ என்றதனை ‘பட்ட போது எழுபோது அறியாள்’
  என்றதனோடு கூட்டி, மகளுடைய வியசனத்துக்குத் திருவாழியாழ்வானுடைய சேர்த்தி
  அழகே காரணம் என்று அருளிச்செய்கிறார். ‘அடைந்தவர் பகைவர்’ என்று தொடங்கி.
  அதாவது, ‘அடைந்தவர்கள் அல்லாதாரான இரணியன் முதலியோரை அழிக்கைக்கும்.