New Page 1
|
114 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
‘நடுவே கண்ணீர்
விழ விடும் இத்தனையோ, விரோதி கனத்திருக்க?’ என்ன, ‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய
விரோதிகளின் கூட்டம்?’ என்கிறாள் மேல் : கிளர்வாழ்வை வேவ இலங்கை செற்றீர் - கிளர்ந்த
ஐஸ்வர்யமானது வேகும்படி இலங்கையை அழித்தீர். 1‘கொழுத்தவனான இராவணனுடைய அழிவினை
விரும்பிய தேவர்களால் பிரார்த்திக்கப்பட்டவரும் நித்தியமான வருமான விஷ்ணு, மனிதலோகத்தில்
இராமானாக அவதரித்தார்; இது பிரசித்தம்’ என்கிறபடியே, வந்து அவதரித்த தமப்பனும் தாயும் சேர
இருத்தற்குப் பொறாதவனுடைய செல்வம் ஆகையாலே ‘கிளர்வாழ்வை’ என்கிறாள். இவ்விளியால்,
2‘ஒன்றை அழிக்க நினைத்தால், முதல் கிடவாமே அழிக்குமவராய் இராநின்றீர்,’ என்ற
தொனிப்பொருள் தோன்றும். இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மின் - இவளுடைய இளமை
பொருந்திய நோக்கு ஒன்றும் கிடக்கும்படி காரியம் பார்த்தருள வேண்டும். ‘இவள் தானே முடிந்து
போகிறாள்? நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், 3உம்முடைய
ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப்பாரும், என்பாள், ‘வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக்
கூறுகிறாள்.
(10)
154
வாட்டம்இல்புகழ்
வாமன னைஇசை
கூட்டி, வண்சட கோபன்
சொல்அமை
பாட்டுஓர் ஆயிரத்து
இப்பத்தால்அடி
சூட்ட லாகும்அம் தாமமே.
பொ - ரை :
குறைதல் இல்லாத புகழையுடைய வாமனனை, வள்ளலாரான ஸ்ரீ சடகோபர் இசையோடு சேர்த்து அருளிச்செய்த
எல்லா இலக்கணங்களும் அமைந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களால், அழகிய செவ்வி
மாலையினை அவனுடைய திருவடிகளில் சூட்டுதலாகிய பேற்றினை அடையலாம்.
வி-கு :
வாட்டம் இல் புகழ் வானமனை, வண் சடகோபன் இசை கூட்டிச் சொல் அமை பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால்
அம் தாமம்
____________________________________________________________
1.
ஸ்ரீராமா. அயோத். 1 : 7.
2. என்றது, ‘இலங்கையை
அடியோடு அழித்தது போன்று, இவளையும் அழியாதே
கொள்ளும்’, என்றவாறு.
3. ‘உம்முடைய ஜீவனம்’
என்றது, ‘மணநோக்கம் உண்டானே’ (பெரியதிரு. 8. 10 : 1.)
என்றதனை நோக்கி;
|