இவ
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1 |
121 |
இவரோடு கலப்பதற்கு
முன்னர் அந்த மோக்ஷ உலகமும் இல்லை யாய்த் தோன்றுகையாலே என்க.1
செந்தாமரைத்தடம்
கண் - துன்பமெல்லாம் தீர இவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிற நிலை. இவரோடே கலந்த பின்பு
ஆயிற்றுத் திருக்கண்கள் செவ்வி பெற்றதும், மலர்ச்சி பெற்றதும். 2‘ஒரே தன்மையையுடையனவற்றுக்கு
எல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே! ஆயின், இது, 3தன் சொரூபத்துக்கு ஒத்த
திவ்விய மங்கள விக்கிரகத்தை உடையவன்’ என்ற புராணவாக்கியத்தோடு முரணாகாதோ?’ எனின், அங்குக்
கர்மம் அடியாக வரும் விகாரம் இல்லை என்கிற இத்தனையேயாம். செம் கனி வாய் செம் கமலம் -
நூற்றுக் கணக்கான உபசார வார்த்தைகளைச் சொல்லுகிற திரு அதரம் இருக்கிறபடி. சிவந்து கனிந்த
அதரமானது, சிவந்த கமலம் போலே இராநின்றது. செந்தாமரை அடிகள் - நோக்குக்கும்
புன்முறுவலுக்கும் தோற்று விழும் திருவடிகள். செம்பொன் திரு உடம்பே - திருவடிகளிலே விழுந்து
அனுபவிக்கும் திருமேனி; இவரோடு கலந்த பின்பு திருமேனியில் பிறந்த புகர்தான் 4‘ஓட
வைத்த பொன்னின் நிறத்தையுடையவன் இறைவன்’ என்னும்படி ஆயிற்று.5
(1)
_____________________________________________________________
1. முன்னையது,
‘இயல்பாகவே வாடினார்கள்’ என்றபடி. பின்னையது, ‘பகவானுடைய
அபிப்பிராயத்தாலே அந்த மோக்ஷ
உலகமும் இல்லையாய்த் தோன்றிற்று’ என்றபடி. ஆக,
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ‘உள’ என்பதற்கு
இரண்டு கருத்து உரைத்தபடி.
2. ‘ஒரே தன்மையை
உடையனவற்றுக்கெல்லாம் இப்படி ஒரு விகாரம் பிறக்கின்றதே!’
என்றது, வியாக்கியாதாலின் ஈடுபாடு.
‘ஒரே தன்மையை உடையவற்றுக்கெல்லாம்’ என்றது,
‘திருமுடி முதலான நித்தியசூரிகளை நோக்கி’ என்க.
3. ஸ்ரீ விஷ்ணு புரா. 1 . 2
: 1
4. மனு ஸ்மிருதி.
12 : 122.
5. ஸ்ரீ ஆளவந்தார்
நிர்வாஹத்தில், ‘அந்தாமம் வாழ்முடி சங்காழி நூல் ஆரமுளவாய்க்
கொண்டு, அந்தாமத்து அன்பு செய்து
என் ஆவிசேர் அம்மான்’ என்ற சொற்களைக்
கூட்டியும், எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘அந்தாமத்து
அன்பு செய்து என் ஆவி
சேர்ந்த பின்னர், அந்தாமம் வாழ்முடி சங்காழி நூலாரமுளவாய், அம்மானும்
ஆனவனுக்குச் செந்தாமரைத்தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள் கொள்க.
|