பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

எப

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 4

127

    எப்பொருளும் தனாய் - தன்னில் வேறாக நின்ற எல்லாப் பொருள்களும் ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே 1பிரகாரமாம்படி தான் பிரகாரியாய். இதனால், ‘ஸ்வாதீனம் அல்லாதது ஒரு பொருளைப் பெற்றுதான் இப்பாடு படுகிறானோ?’ என்கிறார். மரதகம் குன்றம் ஒக்கும் - 2மேல், உலகமே உருவமாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு, அசாதாரண விக்கிஹந்தன்னையே சொல்லுகிறது. 3மேல், ‘மின்னும் சுடர்’ என்று தம்முடைய கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று; அப்புகருக்கு இருப்பிடமான அசாதாரண விக்கிரஹத்தைச் சொல்லுகிறது இங்கு. கண் - 4பந்தத்தை விளைக்கும் கண். பாதம் - பந்தம் அறிந்தால் அனுபவிக்க இழியும் துறை. ஆகிய இவை, அப்பொழுதை தாமரைப்பூ -‘மேல், தாமரையை ஒப்பாகச் சொன்ன இடம் தப்பச் சொன்னோம்’ என்று அழித்துச் சூளுறவு செய்கிறார். கேவலம் தாமரையை ஒப்பாகச் சொல்லில் செவ்வி அழிந்த சமயத்திலும் ஒப்பாகத் தொடங்குமே; ஆதலால், 5அப்போது அலர்ந்த செவ்வியையுடைத்தான தாமரையை ஒப்பனவாம். கை கமலம் - தம்முடைய ஸ்பரிசத்தால் செவ்வி பெற்றபடி. கை அப்போது அலர்ந்த கமலம் போலே இருக்கும்.

_____________________________________________________________

1. பிரகாரம் - விசேக்ஷணம்; அடை. பிரகாரி - விசேஷியம்; அடைகொளி. ‘இப்பாடு’
  என்றது, தம்மை அடைந்த பின்னர்த் திருமேனியிற் பிறந்த புகரை நோக்கி.

2. ‘மேல்’ என்றது, ‘தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என்றதனைக்
  குறித்தது. ‘எப்பொருளும் தானாய்’ என்ற பின்பு ‘மரதகக் குன்றம்’ என்று சேர்த்து
  அனுபவிக்கிறார் என்பது கருத்து.

3. ‘மின்னும்  சுடர்மலை’ என்றவர், இப்பாசுரத்தில் ‘மரதகக் குன்றம்’ என்று கூறுதல்
  கூறியது கூறல் ஆகாமைக்குக் காரணம் காட்டுகிறார், ‘மேல், ‘மின்னும் சுடர்’ என்ற
  தொடங்கி.

4. ‘பந்தத்தை விளைக்கும் கண்’ என்றது, உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள ஒன்பது
  வகையான சம்பந்தத்தைப் பார்வை மாத்திரத்திலேயே உண்டாக்குகிற கண் என்றபடி.

5. ‘இப்பொழுது எம்ம னோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
  செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
  ஒப்பதே முன்பு; பின்புஅவ் வாசகம் உரைக்கக் கேட்ட
  அப்பொழுது அலர்ந்த செந்தா மரையினை வென்றது அம்மா!’

  என்ற செய்யுளை இங்கு ஒப்பு நோக்குக. (கம்பரா. கைகேசி சூழ். 168.)