பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

140

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    பொ - ரை : ‘வேதங்களால் ஒரு குணத்தையேனும் முற்றும் கூறி முடிக்க ஒண்ணாதபடி இருக்கின்ற குடக்கூத்து ஆடிய இறைவனை குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபர் கூறுவதற்கு ஆசைப்பட்டு ஆசைப்பட்டவாறே கூறி முடித்த அந்தாதியான ஓராயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் சொல்ல வல்லவர்கள் இருப்பார்ளேயாயின், அவர்கள் வைகுந்தம் கூடுவார்கள்’ என்றவாறு.

    வி-கு : ‘ஒன்றையும் கூறுதல் ஆராத குடக்கூத்த அம்மானைக் குருகூர்ச் சடகோபன் கூறுதலே மேவிக் கூறின அந்தாதி ஓராயிரம்’ எனக் கூட்டுக. ‘ஒன்றும்’ என்பதில் உள்ள உம்மை தொக்கது. குடக்கூத்து - இது, பதினோராடலுள் ஒன்று; பஞ்சலோகங்களாலும்  மண்ணாலும் செய்த குடம் கொண்டு ஆடுவது; 1பிரத்தியும்னன் மகன் அநிருத்தனைச் சிறை மீட்கும் போது வாணன் பேரூரில் கிருஷ்ணனால் ஆடப்பட்டது. இதனை வேறு வகையாகவும் கூறுவது உண்டு. அந்தாதி - முதற்பாட்டின் ஈற்றிலுள்ள அடியேனும் சீரேனும் பதமேனும் அசையேனும் எழுத்தேனும் அடுத்த செய்யுளின் முதலில் அமையப் பாடுவது ‘அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி’ என்றார் பிறரும் ‘வல்லார் உளரேல்’ என்றது, அதன் அருமை குறித்து நின்றது. 2‘நாலு நாளும் நால்வர் இருவர் உள்ளார் கூடியிருந்து அனுபவிக்கப் பாருங்கோள்’ என்றார் முன்னும்.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர் உளராகில், அவர் பரமபதத்தில் போய் நித்திய அனுபவம் பண்ணப் பெறுவர்’ என்கிறார்.

    கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை - தன்படிகளைப் பேசப் புக்கால், 3ஆனந்தவல்லியிற்சொல்லுகிறபடியே, பேசித் தலைக் கட்ட ஒண்ணாதிருக்கிறவனை. அவ்வாறு பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று. 4‘மகாத்துமனும், ஐந்து ஆயுதங்களைக் கையில் தரித்திருப்

____________________________________________________________

1. ‘வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில மளந்தோ னாடிய குடமும்’ காமன் மகன்
  அநிருத்தனைத் தன் மகள் உஷை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அலனுடைய
  ‘சோ’ என்னும் நகரவீதியிற் சென்று நிலங்கடந்த நீனிறவண்ணன் குடங்கொண்டாடிய
  குடக்கூத்தும்’ என்பது, சிலப்பதிகாரம், கடலாடு காதை; 54, 55.

2. திருவாய். 2.3. 11. வியாக்கியானம் பார்க்க.

3. ‘யாதோ வாசோ நிவர்த்தந்தே’ என்பது. (தைத்தீரிய ஆனந். 9 : 1) அந்த ஆனந்த
  குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றன’ என்பது 
  இவ்வாக்கியத்திற்குப்பொருள்.

4. பாரதம், கர்ண பர்வம்.