| 1ஆக ஒண 
  
    | 
    150 | 
திருவாய்மொழி - 
இரண்டாம் பத்து |  
1ஆக 
ஒண்ணாது’ என்று பார்த்து, உலகத்தைப் பாதுகாத்தற்கு வேண்டும் வியாபாரங்களை எல்லாம் செய்து 
முடித்து, வேறு ஒன்றில் நோக்கு இல்லாதவனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான் என்றபடி. 
இராசாக்கள் அந்தப்புரத்திற்புகுவது, நாட்டுக் கணக்கு அற்ற பின்பே ஆதலின், ‘உலகுகள் ஒக்க 
விழுங்கிப் புகுந்தான்’ என்கிறார். இனி, ‘சிக்கெனப் புகுந்தான்’ என்பதற்கு, 2‘அநந்யப் 
பிரயோசனமாகப் புகுந்தான்’ என்று கூறலுமாம். 
    புகுந்ததன் பின் 
மிக்க ஞானச் சுடர்விளக்காய்த் துளக்கு அற்று - இவரோடே வந்து கலந்து, அக்கலவியில் அதிசங்கையும் 
தீர்ந்த பின்பாயிற்று, 3விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது. என்றது,
4தனக்கு நித்திய தர்மமான ஞானத்தை யுடைத்தான ஆத்மவஸ்து, கர்மம் காரணமாக ஒரு 
சரீரத்தை மேற்கொண்டு இந்திரியங்களாகிய வழியை விரும்பிக்கொண்டு சஞ்சரிக்க வேண்டும்படி 
போந்தது, ஒரு நாள் வரையிலே பகவானுடைய திருவருளும் பிறந்து ஞானக் குறைவும் கழியக் கடவதாய் 
இருக்கும் அன்றே? அங்ஙனம் ஓர் ஏதுவும் இன்றிக்கே இருக்கிற சர்வேஸ் 
_____________________________________________________________ 
1. செருப்பு வைத்துத் திருவடி 
தொழுகையவாது, ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பெருமாளைத் திருவடிதொழ எழுந்தருள, அவர் திருவடிகள் பித்தப் 
பிளவாய் இருக்கையாலே ஸ்ரீபாதரக்ஷை
 தரித்துக்கொண்டு எழுந்தருளினாராய் அதனைத் திருவாசலின் கண் வைத்து
 எழுந்தருளின அளவில், ஸ்ரீ பாதரக்ஷையிலேதானே திருவுள்ளம் சென்று, ‘தீர்த்தம்
 பிரசாதிக்க’ என்று 
அருளிச்செய்ய வேண்டியதைச் ‘செருப்புப் பிரசாதித்தருள’ என்றாராம்
 என்பது.
 
2. ‘சிக்கென’ என்பதற்கு 
இருபொருள்; ‘வேறொன்றில் நோக்கில்லாதவனாகி’ என்றும், ‘வேறுபயனைக் கருதாதவனாகி’ என்றும், 
‘அநந்யப் பிரயோஜனமாக’ என்றது, ஜகத்ரக்ஷண
 ருபப் பிரயோஜனம் சித்திக்கையாலே என்றபடி.
 
3. விகஸித - மலர்ந்த, 
ஸஹஜம் - உடன் பிறந்தது; ‘இயற்கை’ என்றபடி. சர்வஜ்ஞன்-   முற்றறிவினன். விஜ்வரன் - நடுக்கமற்றவன்.
 
4. ‘கர்ம வசியனான சேதனனுக்குச் 
சம்சாரியான நாளில் பகவானுடைய நிக்ரஹமடியாகஞானசங்கோசம் பிறக்கக்கடவதாய், பகவானுடைய திருவருள் 
அடியாக ஞானம் மலர்ச்சி
 பெறுவதாய் இருக்கும்; அப்படி ஓர் ஏதுவின்றியே இருக்கின்ற சர்வேஸ்வரனும்
 ஆழ்வாருடைய பிரிவாலே சங்குசிதஞானனாய், அவருடைய சம்ஸ்லேஷத்தாலே மலர்ந்த
 ஞானவானாயிராநின்றான். 
இது என்ன பிரணயித்வம்!’ என்றபடி. நித்திய தர்மம் -
 சேஷத்துவம்; அடிமையாந்தன்மை. பிரணயித்வம் 
- காதல் தன்மை.
 |