பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

176

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

என்னும் திருப்பெயரை உடையவர் ஆனீர்’ என்கிறபடியே, சர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்றிருக்குமவர்கள் என்னுதல். சர்வேஸ்வரன் உடையார்’ என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புகிறது; ‘எமர்’ என்கிற ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது. இத்தால் இறைவன் அங்கீகரிப்பதற்கு ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது என்றபடி. எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும் கேசவன் தமர் ஆனார்கள் என்க. 1‘குழந்தாய்! தருமபுத்திரா! வாராய்; ஒரு நாளாகிலும் பூமியில் தண்ணீரை விடு; அவ்வாறு விடும் தண்ணீர் வமிசத்தை மூ ஏழ் தலைமுறை கரை ஏற்றுகிறது’ என்றும், 2‘கழிந்து போன பத்துப் பிறவிகளையும், இனி வருகின்ற பத்துப் பிறவிகளையும், தன்னையும் பரிசுத்தப்படுத்துகிறது’ என்றும் வரும் பிரமாணங்களைக் காண்க.

    மா சதிர் இது பெற்று - 3‘விதி சூழ்ந்ததால்’ என்கிற ஆகஸ்மிக பகவத்கிருபையைப் பெற்று என்னுதல்; அன்றிக்கே, ‘மாதவன் என்றதே கொண்டு’ என்கிற சொல் மாத்திரத்தையே பெற்று என்னுதல்,; அன்றிக்கே, தாம் பெற்ற பேற்றைத் தம்மோடு சம்பந்தமுடையாரும் பெறும்படியான பேற்றைப் பெற்று என்னுதல்; அன்றிக்கே, தடக்கைச் சதுரனைப் பெற்று என்னுதல். தம் தலையால் வந்தது அன்று, இறைவன் அடியாக வந்தது; ஆதலின், முடிவின்றியே இருக்கிறது என்பார், ‘மா சதிர்’ என்கிறார். காணக்காண அவன் சிரசாகத் தாங்குகிறான் ஆதலின், ‘இது பெற்று’ என்கிறார். நம்முடைய வாழ்வு - ஸ்ரீவைஷ்ணவ சம்பத்து. ‘அவர்கள் கேசவன்

_____________________________________________________________

1. ஒருவன் அபிமானங்கொண்டு எல்லாரும் உஜ்ஜீவிக்கக் கூடுமோ? என்னும்
  வினாவிற்கு விடையாக இரண்டு மேற்கோட்சுலோகங்கள் காட்டுகிறார். இது, மஹாபாரதம்.

2. போதாயனதர்மம்:

  ‘உன்னைஇங்கு உயிர்த்த ஆற்றால் உரைக்கும்நின் குலத்து மூவேழ்
  என்னும்நன் மரபு ளோரும் இயைந்தனர் புனிதம் என்றால்
  அன்னவன் புனிதன் ஆதற்கு ஐயம்என்? அவனுக்கு ஈமம்
  மன்னுநல் வினைசெய் கென்ன மைந்தன்அவ் வினைசெய் தானால்.’

  என்னும் பாகவதச் செய்யுள் ஈண்டு ஒப்பு நோக்கலாகும். 7-ஆம் ஸ்கந்தம். இரணியனைக்
  கொன்ற அத். 107.

3. ‘மா சதிர் பெற்று’ என்பதற்கு நான்கு வகையான பொருள் அருளிச்செய்கிறார்;
  முன்னைய இருவகைப் பொருள்களும் உபாயம் பரம்; பின்னைய இரு
  வகைப்பொருள்களும் பல பரம். ஆகஸ்மிகம் - காரணமில்லாமல் கிடைப்பது.
  ‘தடக்கைச்சதுரனைப் பெற்று’ என்ற இடத்தில் ‘சதுரன்’ என்றது, இறைவனை.