இந
|
ஏழாந்திருவாய்மொழி - பா. 9 |
197 |
இந்திரியங்களைத் தான்
இட்ட வழக்கு ஆக்கினான் என்கிறார். இனி, பத்தி முன்னாக உன்னை அனுபவியாநிற்கவும், தடைகளும்
நீங்கி எல்லை இல்லாத மகிழ்ச்சியும் பிறக்கும்படி உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று இனியர்
ஆகிறார் எனலுமாம்.
சிரீதரன் - பெரியபிராட்டியாரைத்
திருமார்விலே உடையவன். செய்ய தாமரைக் கண்ணன் -1‘பிராட்டியைத் திருமார்விலே
தரித்துக்கொண்டு இருப்பவரும், எங்கும் நிறைந்தவரும் விசாலமான தாமரை இதழ் போன்ற திருக்கண்களை
உடையவரும்’ என்கிறபடியே, நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமாறு போன்று, பிராட்டி
மார்வில் இருக்கையாலே குளிர்ந்த கண்ணழகினையுடையவன். என்று என்று - இப்படி மாறாதே சொல்லி.
இராப்பகல் வாய் வெரீஇ - இதற்கு, ‘இவர் பத்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்திரை
இருக்கும்படி’ என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர். இனி, பட்டர் ‘இராப்பகல் வாய்வெரீஇ’
என்றது முதல் ‘மரீஇய தீவினை மாள’ என்றது முடிய, 2‘ஆடிஆடியில்’ இவர்க்கு ஓடின நிலையினைக்
கூறுகின்றது என்றும், ‘இன்பம் வளர’ என்றது, 3‘அந்தாமத்தன்பு’ தொடங்கி,
‘கேசவன் தமர்’ முடிய உண்டான பிரீதியைச் சொல்லுகிறது என்றும் அருளிச்செய்வர்.
அதாவது, ‘இராப்பகல்
வாய் வெரீஇ’ என்றது, 4‘இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனை. ‘அலமந்து’ என்றது
5‘எங்கும் நாடி நாடி’ என்றதனை. ‘கண்கள் நீர் மல்கி’ என்றது, 6‘தனகுவளை
ஒண்கண்ண நீர்கொண்டாள்’ என்றதனை. ‘வெவ் வுயிர்த்து’ என்றது, 7‘உள்ளம் மலங்க
வெவ்வுயிர்க்கும்’ என்றதனை. ‘மரீஇய தீவினை மாள’ என்றது, ஆயிரம் யாண்டு முதலையின் வாயிலே
யானை இடர்ப்பட்டது போன்று, ‘ஆடியாடி’ யில் இவர்க்குப் பிறந்த ஆற்றாமையினை. இவர்க்கு இப்படிப்பொருந்தின
பிரிவின்
_____________________________________________________________
1. விஷ்ணு தர்மம்.
2. ‘ஆடியாடி’ என்றது, இப்பத்தில்
நான்காம் திருப்பதிகம்.
3. ‘அந்தாமத்தன்பு’, இப்பத்தில்
ஐந்தாந்திருப்பதிகம்.
4. திருவாய். 2. 4 : 5.
5. திருவாய். 2. 4 : 1.
6. திருவாய். 2. 4 : 5.
7. திருவாய். 2. 4 : 4.
|