பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஏழாந்திருவாய்மொழி - பா. 11

201

குணங்கட்கும் உபலக்ஷணம். 1காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது. பராபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை. இப்படி இருக்கிறவன், எற்பரன்- 2மதேக சித்தன். 3என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்தகற்பகம் - கொடையில் பிரசித்தமாய் இருப்பது கற்பகமாதலின், அதனினின்று வேறுபடுத்தி அருளிச் செய்கிறார். என்னை ஆக்கிக் கொண்டு - அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்குமது இல்லை அன்றே அதற்கு? எனக்கே - ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை அன்றே அதற்கு? தன்னைத் தந்த வேறு சில பிரயோஜனங்களைக் கொடுக்குமது அல்லாது தன்னைக் கொடுக்கமது இல்லை அன்றே அதற்கு? என் அமுதம் - தான் போக்யமாய் இருக்குமது இல்லை அன்றே அதற்கு? எனக்கு எல்லை இல்லாத இனியனானவன். கார்முகில் போலும் வேங்கட நல்வெற்பன் - கொடுத்ததை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற தன்மையையுடைய திருமலையைத் தனக்கு வாசத்தானமாக உடையவன். இதனால், மேலே கூறிய கொடைக்கு அடி திருமலையின் சம்பந்தம் என்பதனைத் தெரிவித்தபடி. ஸஹ்யம் பற்றின ஒளதார்ய மன்றோ? விசும்போர் பிரான் தாமோதரன் எந்தை - நித்தியசூரிகட்கு நிர்வாஹகனாய் இருந்தும், தன்னை அடைந்தவர்களான ஆயர்கட்கும் ஆய்ச்சியர்களுக்கும் கட்டவும் அடிக்கவுமாம்படி வந்து அவதரித்து, அச்செயலாலே என்னை அடிமை கொண்டவன்.

(11)

_____________________________________________________________

1. ‘காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது’ என்றது, ‘பற்பநநபன்’ என்றதனை நோக்கி.
  காரணத்வ பிரயுக்தமான - காரணமாயிருக்குந் தன்மையால் உண்டான. ‘உயர்வற உயரும்
  பெருந்திறலோன்’ என்றதனை நோக்கி, ‘பராபிபவன சாமர்த்தியம் தொடக்கமான
  குணங்கள் அவை’ என்கிறார்.

2. மதேக சித்தன் - என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவன்.

3. வியாக்கியாதா பதசாரம் எழுதுவதில் ஒப்புயர்வற்றவர் என்பதனை ஈண்டும் காண்க.

4. ‘மேலே கூறிய கொடை’ என்றது, ‘தனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்றதனை
  நோக்கி. ஸஹ்ய பர்வதத்தினின்று உண்டாகும் பிரவாஹத்துக்கு நாசமில்லாதது போன்று,
  திருமலையின் சம்பந்தமடியாக உண்டான பகவானுடைய கொடைக்கும் ஒரு காலும்
  குறைவில்லையாதலின், ‘ஸஹ்யம் பற்றின ஒளதார்யமன்றோ?’ என்கிறார். ஸஹ்யம் -
  எழுவகை மலைகளுள் ஒன்று; குடக்கிலுள்ளது; மேற்குத்தொடர்ச்சி மலை. ஒளதார்யம் -
  கொடை.