கலப
எட்டாந்திருவாய்மொழி - பா. 1 |
209 |
கலப்பது; பிரசத்தராய்
விளங்குகின்ற அந்தப் பிரமன் சிவன் இருவர்கட்கும் தானே காரணம் ஆனவன்; எல்லாப் பொருள்கட்கும்
ஒத்த பிறவியை உடையவன்; மோக்ஷத்திற்குக் காரணமானவன்; பிறவியாகிற கடலை நீந்த வேண்டும் என்று
இருப்பவர்கட்குத் தெப்பமாக இருப்பவன்’ என்றவாறு.
வி - கு :
அணைவது முதல் புணர்வது முடிய, மோக்ஷ உலகத்தைப் பற்றிய செயல்கள். மற்றை அடிகளிற்கூறப்படுவன இவ்வுலகில்
உள்ளார்க்கு அவன் செய்யும் செயல்கள். அணைவது, புணர்வது - தொழிற்பெயர்கள். ‘அவர்’ என்பது,
பிரசித்தியைக் காட்ட வந்தது. இணைவன் - ஒத்தவன்; இணை - ஒப்பு. புணைவன் - தெப்பமானவன்;
புணை - தெப்பம்.
இத்திருவாய்மொழி
நாற்சீர் நாலடியாய்த் துள்ளல் ஓசையிற் சிறிது வழுவி வந்த தரவுகொச்சகக் கலிப்பா
ஆகும்.
ஈடு : முதற்பாட்டு,
1முக்தப் பிராப்பிய போகத்தைச் சொல்லுகிறது. இப்பாசுரம் இத்திருவாய்மொழியின்
சுருக்கம்; மேலுள்ள பாசுரங்கள் இப்பாசுரத்தில் ஒவ்வொரு பதத்தைப் பற்றிப் போருமவையும்,
அவைதம்மைப் பற்றி அவற்றிற்கு மேலுள்ள பாசுரங்கள் எழுமவையுமாய் இருக்கின்றன.
அரவணைமேல் அணைவது
- முக்தப் பிராப்பிய போகந்தான் இருக்கிறபடி. 2பரியங்க வித்தையிற் சொல்லுகிறபடியே,
சர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூடத் திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
____________________________________________________________
1. ‘அணைவது அரவணைமேல்; பூம்பாவை ஆகம் புணர்வது’ என்றதனை நோக்கி, ‘முக்தப்
பிராப்பிய போகத்தைச்
சொல்லுகிறது’என்கிறார். ‘இருவர் அவர் முதலுந்தானே’ என்பது
போன்றவைகளை நோக்கி,
‘இப்பாசுரம்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
2.
‘அணைவதரவணைமேல்’ என்ற அளவில், முக்தப் பிராப்பிய போகத்தைக் கூறியபடி
யாங்ஙனம்?’ என்னும்
வினாவிற்கு விடையாக, ‘பரியங்க வித்தையிற்சொல்லுகிறபடியே’
என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
‘பரமபதத்திலே திருமாமணி மண்டபத்திலே
திருவனந்தாழ்வான்மேலே தர்மமுதலான எட்டுப் பீடத்தை
உடைத்தான திவ்ய
சிம்மாசனத்தின் மத்தியில் ‘அஷ்ட தளபத்மம்’ என்கிற தாமரையிலே, அந்தத்
தாமரையின் அஷ்டதளத்திலே இருக்கிற ‘விமலை’ முதலான பெண்கள் எண்மரும், அதன்
கர்ணிகையிலேஇருக்கிற,
‘அநுக்கிரஹை’ என்றவளோடே கூடத் திருவெண்சாமரம் பரிமாற
அந்தக் கர்ணிகையிலே திருவனந்தாழ்வான்மேலே
பிராட்டிமாரோடு கூட வீற்றிருப்பது’
பர்யங்கா வித்யா பிரகாரம் என்பதாகக் கொஷீதகீ பிராஹ்மணத்திலே
சொல்லப்பட்டது
என்று அருளிச்செய்வர்.
|