ஈ
  
    | 
     
முதல் திருவாய்மொழி - பா. 7  | 
    
     
    21  | 
   
 
    ஈடு : 
ஏழாம் பாட்டு. 1‘மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள். 
    இப்பாசுரத்திற்கு,
2முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, 3சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் 
பற்றி எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: அம்மங்கியம்மாளும் 
அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு 
கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க, அத்தைப்பார்த்து, 4‘ஆற்றாமைக்குப் 
போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக்கடவையோ?’ என்கிறாள் என்பதாம். 
 
    மடம் நெஞ்சம் தோற்றோம் 
- பகவத் விஷயம் என்றால் விட மாட்டாதபடி ஆசையுள்ள நெஞ்சை இழந்தோம்; இனி, இதற்கு, ‘உரிமைப்பட்ட 
நெஞ்சை இழந்தோம்’ என்று பொருள் கூறலுமாம். ‘எம்மே போல்’ என்கிற பொருள்களையெல்லாம் கூட்டிக்கொண்டு 
‘சொல்லுகிறாளாதலின், ‘தோற்றோம்’ என்கிறாள். எம்பெருமாற்கு - 5கெடுவாய், 
வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது? நாரணற்கு -‘தன்னுடைமை’ என்றால் 
6வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது? இனி, இதற்கு, ‘சுலபனாயிருக்கமவனுக்கு’ என்று 
பொருள் கூறலுமாம். எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை - ஆற்றாமையுடையார், தத்தமது ஆற்றாமை 
சொல்லிக் கூப்பிடுவர்கள் அன்றோ? ‘நாங்கள் பெறப்போகும் பயன்  
_____________________________________________________________ 
1. மதி - சிலேடை : அறிவும் 
சந்திரனும். அந்தகாரம் - இருளும் அஞ்ஞானமும். 
2. முன்னும் பின்னும் 
போருகிறபடியாவது, ‘எம்மேபோல்’ என்று மற்றைப் பொருள்களையும் 
  உளப்படுத்திக் கூறுதல். 
3. ‘சொற்களின் நயத்தைத் 
திருவுள்ளம் பற்றி’ என்றது, ‘வேற்றோர் வகையில் கொடிதாய், 
  மாற்றாண்மை நிற்றியோ?’ என்ற 
பதங்களின் நயத்தை நோக்கி என்பது. 
4. 3ஆம் பக்கம் 
குறிப்புரை பார்க்க. 
5. கெடுவாய் - வார்த்தைப்பாடு. 
6. ‘நாராயணன்’ என்ற 
சொல்லுக்கு, அன்மொழித் தொகையாகவும் நான்காம் வேற்றுமைத் 
  தொகையாகவும் கொண்டு பொருள் 
கூறப்படுதமாதலின்: வாத்சல்ய குணமுடையவனுக்கு’, 
  ‘சுலபனாயிருக்குமவனுக்கு’ என்று பொருள் அருளிச்செய்கிறார். 
‘நாரங்களை இருப்பிடமாக 
  உடையவன்’ என்ற பொருளில் வாத்சல்யம்; ‘நாரங்களுக்கு இருப்பிடமாய் 
உள்ளவன்’ 
  என்ற பொருளில் சுலபம். நாரம் - ஆத்துமாக்கள், வாத்சல்யம் - அன்பு;    (வத்சம் 
- 
  கன்று.)  
 |