த
|
எட்டாந்திருவாய்மொழி - பா. 3 |
217 |
திருமேனியை விட்டு விலகின்,
ஆற்றல் இல்லாதவர்கள் ஆவர்கள் என்றபடி. 1இத்தால், சாமாநாதிகர்ணயத்தாலே அந்தர்யாமித்துவம்
சொல்லிற்று. ‘புணர்த்த தன் உந்தி’ என்கையாலே, 2காரணத்துவம்
சொல்லிற்று; ‘ஆகத்து மன்னி’ என்கையாலே, திருமேனியைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினை
உடையவர் என்னுமிடம் சொல்லிற்று.
புணர்த்த திருவாகித்
தன் மார்வில் - திருமார்வில் எப்பொழுதும் சேர்ந்திருக்கிற பெரிய பிராட்டியாரை உடையனாய்.
3‘இது இப்பொழுது சொல்லுகிறது என்?’ என்னில், பிரமன் முதலியோர்கட்கு நிர்வாஹகன்
என்றதைப் போன்று, திருமகள் சம்பந்தமும் ஐஸ்வர்யத்துக்குக் காரணமாகையாலே சொல்லுகிறார். பெரிய
பிராட்டியாருடைய சம்பந்தம் நீர்மைக்கும் மேன்மைக்கும் காரணமாம் அன்றோ?’ தான் சேர்
புணர்ப்பன் - படைத்தல் காரணமாக ஏகார்ணவத்திலே சாய்ந்தருளினவன் என்னுதல்; தனக்குத் தகுதியான
செயல்களை உடையவன் என்னுதல். பெரும்புணர்ப்பு எங்கும் புலனே - 4பிரமன்முதலியோர்
மேற்கொண்ட காரியங்களை அவர்கள்
_____________________________________________________________
1. ‘இத்தால்’ என்றது,
‘புணர்த்த தன் உந்தியோடு ஆகத்து மன்னிப் புணர்க்கும் அயனாம்;
ஆகத்து மன்னி அழிக்கும் அரனாம்’
என்ற இதனால், என்றபடி. ‘அந்தர்யாமித்துவம்
சொல்லிற்று’ என்றது, ‘சரீர ஆத்தும பாவம்
சொல்லிற்று’ என்றபடி.
2. காரணத்துவம்
சொல்லிற்று’ என்றது, ‘பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்,
விரிகமல உந்தியுடை விண்ணவனை’
( சிலப். ஆய்ச்.) என்கிறபடியே, உலகமெல்லாம்
உண்டாதற்குக் காரணமாதலை நோக்கி.
‘பந்திக் கமலத் தடம்சூ
ழரங்கர் படைப்புஅழிப்புச்
சிந்தித் திடுவதும் இல்லைகண்
டீர்!அத் திசைமுகனோடு
உந்திக் கமலம் விரிந்தால்
விரியும்; உகக்கடையில்
முந்திக் குவியி லுடனே
குவியும்இம் மூதண்டமே.’
என்றார் திவ்வியகவியும்.
(திருவரங். மாலை, 19.)
3. ‘இது இப்பொழுது
சொல்லுகிறது என்? என்னில்’ என்றது, ‘ஈஸ்வரத்துவம் சொல்லுகிற
இவ்விடத்திலே லக்ஷ்மீ சம்பந்தம்
சொல்லுதல் என்?’ என்றபடி.
4. ‘முன்னுரு வாயினை நின்திரு
நாபியின் முளரியின் வாழ்முனிவன்
தன்னுரு வாகி இருந்து படைத்தனை;
பலசக தண்டமுநீ
நின்னுரு வாகி அளித்திடு
கின்றனை; நித்த விபூதியினால்
என்னுரு வாகி அழிக்கவும்
நின்றனை; ஏதம்இல் மாதவனே!’
என்ற வில்லிபாரதச் செய்யுள்
ஈண்டு ஒப்பு நோக்கலாகும். இது சிவபெருமான்
கிருஷ்ணனை நோக்கிக் கூறியது. (பதின்மூன்.
போர்ச். 220.)
|